பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அமெரிக்க நாட்டின் தலைவர்

ஏழு தினங்களுக்குப் பிறகு கென்னடி வெற்றி வீரனைப் போல் வாஷிங்டனுக்குத் திரும்பினர். அவர் தமது அலுவ லகத்தில் நுழைந்தபோது செயலாளர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். செய்திதாள் நிருபர்கள் பலர் அங்குக் கூடியிருந்தனர். வாழ்த்துச் செய்திகள் குவிந் திருந்தன. டிக் கிக்சன் என்பார் அனுப்பி வைத்த பழக் கூடையொன்று அவரை வரவேற்றவண்ணம் மே ைச யி ன் மேல் காத்திருந்தது.

கென்னடி மறுநாள் மேல் சபைக்குள் காலெடுத்து வைத்தபோது மற்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தனர். ஜனநாயகக் க ட் சித் த ல வ ர | ன இலிண்டன் பி. ஜான்சன், ஜான் ! உம்மைக் காண மிகவும் மகிழ்ச்சியடைகிருேம் ’ என்று கூறினர்.

கி. பி. 1951 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைவர் தேர்தல் வந்தது. அதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திருவாளர் ஸ்டீவன்சனை அமெரிக்கத் தலைவர் பதவிக்கு நிற்க வைப்ப தென்று முடிவாயிற்று. துணைத்தலைவர் பதவிக்குத் திருவாளர் கெயாவரும், கென்னடியும் ஜனநாயகக்கட்சி உறுப்பினராகப் போட்டியிட்டனர். இவ்விரண்டு பேரில் யாரையாவது ஒரு வரைக் கட்சி முறையில் தேர்ந்து பிறகு துணைத் தலைவராகத் தேர்தலில் நிற்க வைத்தாக வேண்டும். ஜனநாயகக் கட்சி யின் சார்பில் யாரை அமெரிக்கத் துணைத் தலைவராக நிற்க வைப்பது என்பதை முடிவு செய்யக் கட்சிக்குள்ளேயே ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. சிகாகோ நகரில் நடந்த இத்தேர் தலில் கென்னடி தோல்வியடைந்துவிட்டார். எ னி னும் தோல்வி கண்டு அவர் உள்ளம் தளர்ந்தாரல்லர். தோல்வி யையும் வெற்றியையும் ஒப்பமதிக்கும் பண்பு அரசியல்வாதி களுக்கு வேண்டும். அ ப் ப ண் பு கென்னடியிடம் நிறைந்