பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


திருந்தது. தோல்வியே வெற்றியின் அடிப்படை ' என்ற பழமொழி கென்னடியின் வாழ் க் கை யி ல் உண்மையாகப் போகிறது என்பதை உலகம் விரைவில் அறியாமல் இல்லை.

தோல்வியடைந்த கென்னடி தம் இருப்பிடத்திலிருந்து எழுந்து நின்றர். சீமாட்டிகளே ! நண்பர்களே ! நாட்டின் நாற்றிசையிலிருந்தும் வந்திருந்து என்னிடம் அன்பு காட்டிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு என் உ ள ம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க நாட்டின் துணேத் தலைவர் பதவிக்குத் திருவாளர் கெபாவரை ஜன நாயகக் கட்சியின் வேட்பாளராக நிற்க வைக்கும்படி நான் முன் மொழிகிறேன் ” என்று கூறினர். இதைத் தொலைக் காட்சிக் (Television) கருவியின் மூலம் நேரில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ம க்க ள் , உற்சாகத்தோடு ஆர வாரம் செய்தனர். கென்னடியின் பெருந்தன்மை எல்லா ருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது.

சிகாகோவில் அடைந்த தோல்விக்குப் பிறகு கென்ன டியின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு துன்ப நிகழ்ச்சி ஏற் பட்டது. ஜாக்குலினுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்து விட்டது. எதிர்பாராத இவ்விழப்பால் கென்னடி தம்பதியர் மிகவும் வருந்தினர். முதல் குழந்தையைப் பறிகொடுத்த வீட்டில் குடியிருக்க ஜாக்குலின் விரும்பவில்லை. எனவே, கென்னடி தமது வீட்டையும், அதை ஒட்டியிருந்த பண்ணே யையும் தம்பிக்கு விற்றுவிட்டு ஜார்ஜ் டவுனில் குடியேறினர். 1957 ஆம் ஆண்டின் இறுதியில் ஜாக்குலினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கரோலின் என்று பெயரிட்டனர்.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் கென்னடியின் பதவிக் காலம் முடிவுற்றது. கென்னடி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு 8,74,618 வா க் கு க ள் மிகுதியாகப் பெற்று.