பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


  • உலக உருண்டையின் பாதிப் பகுதியில் வறுமை யால் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் நாங்கள் ஒரு செய்தி விடுக்கிருேம். அவர்கள் தங்கள் வறுமையைப் போக்கிக்கொண்டு தம் சொந்த முயற்சியோடு வாழ, எங்க ளால் முடிந்த உதவியைக் காலவரையறையின்றிச் செய்யக் காத்திருக்கிருேம். பொதுவுடைமை நாடுகள் அவர்களுக்கு உதவி செய்கின்றன என்பதால் நாங்கள் உதவி செய்ய முன் வரவில்லை. அறத்தின் அடிப்படையில் நாங்கள் இதைச் செய்கிருேம். சுதந்திரம் பெற்ற ஒரு பெருநாடு, பெருந் தொகையான ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லே என்ருல், சிறு தொகையான பணக்காரர்களை ஒரு நாளும் காப்பாற்ற முடியாது. நம் நாட்டு எல்லைக்குத் தெற்கிலிருக்கும் நாடுகளுக்கும் நாம் ஒன்று சொல்ல விரும்புகிருேம். ஒரு சுதந்திர நாடு மற்ருெரு சுதந்திர நாட்டுக்குத் துணையாக இருக்கவேண்டும். நாம் தோளோடு தோள் சேர்ந்து நின்று வறுமையை எதிர்த்துப் போராடுவோம். ஆ ைல் பகை என்னும் தீய ஆற்றலுக்கு இரையாகாமல் நம்மைக் காத்துக் கெர்ள்வோம். அமெரிக்கக் கண்டங்களில் அழிவோ, ஆக்கி ரமிப்போ நேரும்போது, அண்டை நாடுகளான நாம் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம். நம் வீட்டுக்கு நாமே தலைவர் என்பதை மற்றவர்களுக்குத் தப்பாமல் உணர்த்துவோம்.
  • அணுக் கருவிகள் தோன்றி உ ல கி ல் அமைதியை அழிக்கக் காத்திருக்கும் இந்நேரத்தில், ஐக்கிய நாடுகளின் சபை ஒரு நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாகக் காட்சி யளிக்கிறது. அது ஒரு வசை மன்றமாக மாருமல், பிற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாவல் ம ன் ற மா க மாறுவதற்கு எங்க ளாலான முயற்சியை மேற்கொள்வோம் என்று உறுதி கூறுகிருேம்.

இறுதியாக நம்மை எதிரிகளாகக் கருதும் நாடுகளுக்கும் நாங்கள் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிருேம். அறிவியல்