பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


வெள்ளை மாளிகையைப்போல் வசதியான ஒரு மாளிகை

உலகில் வேறெங்கும் கிடையாது. அழகிலும் இம்மாளிகை ஒப்பில்லாதது. ஜாக்குலின் இம்மாளிகையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், இதை மே லு ம் அழகு படுத்த விரும்பினள். -

  • இந்த வெள்ளே மாளிகையில் வாழ்ந்த முன்ள்ை அமெரிக்கத் தலைவர்கள் பல பொருள்களை விரும்பிப் போற்றி வந்திருக்கலாம். அப்பொருள்கள் நாட்டின் பல பகுதிகளில், பலரிடத்தில் இருக்கலாம். அக்கலைப்பொருள்களைத் தேடிச் சேகரித்து இம்மாளிகையில் நிரப்ப விரும்புகிறேன். அக்கலைக் கருவூலங்கள் யாரிடம் இருக்கின்றனவோ, அவர்களெல்லாம் அருள் கூர்ந்து அனுப்பி வைக்கவேண்டும்’ எ ன் று ஜாக் குலின் ஓர் அறிக்கை விடுத்தார். அவ்வறிக்கையைப் பார்த்த அமெரிக்க மக்களும், கலைப்பொருள்களே அனுப்பி வைத்தனர். அவற்றைக் கொண்டு ஜா க் கு லி ன் ஒரு பொருட்காட்சியே அமைத்துவிட்டார். அமெரிக்க நாட்டு நிாவாகத்தில் கென் னடிக்கு எவ்வளவு பெருமையுண்டோ, அந்த அளவு பெருமை வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் ஜாக்குலினிக்கு உண்டு. -

கென்னடியின் குடும்பம் ஓர் அரசியற் குடும்பம். தம்பி ராபர்ட் கென்னடி அமெரிக்க நாட்டின் சட்டத்துறைத் தலைவர் (Attorney General) மைத்துனர் சர்ஜெண்ட் ஷ்ரீவர் அமை திப்படையின் இயக்குநர். கடைசித் தம்பி எட்வர்டு கென்னடி மாசாசூசெட்ஸ் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர். இவ்வர சியற் சூழ்நிலை .ெ வ ள் 8ள மாளிகையில் நல்ல சுறுசுறுப்பை உண்டாக்கியது. கென்னடி இயந்திர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார் தந்தையின் வேகம் குழந்தைகளான கரோலினிக்கும், சின்ன ஜானுக்கும் துளிக்கூடப் பிடிக்க வில்லே.

ஒரு நிருபர், ஒரே அவசரத்தில் இருப்பவர் இளைஞர் கென்னடி அவருடைய மகளான கரோலினுக்கு ஆறு