பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


சொற்கள்தாம் தெரியும். அப்பா, வான் ஊர்தி, உந்துவண்டி, தொப்பி, செருப்பு, நன்றி. என்பவையே அச்சொற்கள். இந்த ஆறு சொற்களில் மூன்று வேகத்தைக் குறிப்பவை ’ என்று நகைச் சுவையோடு ஒரு முறை எழுதியிருந்தார்.

கென்னடி அமெரிக்கத் தலைவராக வெள்ளை மாளிகை யில் குடியேறியதும், இந்த விளையாட்டிளேஞன் என்னத் தான் செய்யப் போ கி ரு ன் : பார்ப்போம்” என்று உலக அரசியல் தலைவர்களெல்லாம் விழிப்போடு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை

அணு ஆயுத ஒழிப்பு உடன்படிக்கையின் மூலமும் கியூபா நெருக்கடியின்போது காட் டிய உறுதியின் மூலமும் உலக அரசியல் வாதிகளின் நெஞ்சில் அழியாத இடம் பெற்றுவிட்டார் கென்னடி. இறுதியாக அவர் மேற்கொண்ட முயற்சி மனிதத் தன்மையை உயர் த் தும் பெரு முயற்சி ; * மக்கள் உரிமைச் சட்டத்தை கொணர்வதற்கு மேற் கொண்ட முயற்சி. இச்சட்டத்தைக் கொண்டுவரக் கென்னடி முயற்சி எடுத்துக்கொண்ட காரணத்தால், அமெரிக்க நாட்டு மக்களில் பாதித் தொகையினரின் வெறுப்புணர்ச்சியைத் தேடிக் கொள்ள நேரிட்டது. அதற்காகக் கென்னடி அஞ்ச வில்லை.