பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மக்கள் உரிமைச் சட்டம்

அமெரிக்க ஐக்கிய நாடு பெரும் நிலப்பரப்பைத் பின்ன கத்தே கொண்ட ஒரு துணைக் கண்டம். வெள்ளேயர்கள் அங்குக் குடியேறிய காலத்தில் அந்நாடு காடுகளும், அடர்ந்த புல் வெளிகளும் கொண்ட பரந்த நிலப்பரப்பாக விளங்கியது. செவ்விந்தியர்கள் என்ற நாகரிகமற்றமக்கள் அமெரிக்கக்காடு களில் வாழ்ந்து வந்தனர். வெள்ளேயர்கள் செவ்விந்தியர்களை அந்நாட்டின், மேற்கெல்லைக்குத் துரத்தியடித்துவிட்டுக் குடி யேற்ற நாடுகளை ஏற்படுத்தினர். அமெரிக்க நாடு வற்ருத பேராறுகளையும், வளங்கொழிக்கும் சமவெளிகளையும், எடுக்க எடுக்கக் கு ைற யா த நிலக்கரி, இரும்புச் சுரங்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தது. இவ்வியற்கை வளங்களே நல்ல முறை யில் வெளிக் கொணர்ந்து மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படு மாறு செய்வதற்கு எல்லையற்ற உடலுழைப்புத் தேவைப் பட்டது. இதன் பொருட்டே அடிமை வாணிகம் அமெரிக்கா வில் தோன்றியது.

இருண்ட கண்டம் என்று வழங்கப்பட்டு வந்த ஆப்பிரிக் காவில் பழங்குடி மக்களுக்கு நீக்ரோவர் என்பது பெயர். இம்மக்கள் கருத்த மேனியும், கருங்கற்சிலை போன்ற உடற் கட்டும், தடித்த உதடும், அகன்ற நெற்றியும், சலியாத உடல் வலிமையும் வாய்க்கப் பெற்றவர்கள். வன வி லங்கு க ளை வேட்டையாடிப் பிடிப்பது போல் இம்மக்களைக் கப்பல் கப்ப லாக ஆப்பிரிக்காவிலிந்து ஐரோப்பியர்கள் பிடித்து வந்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்றனர் ; ஆடுமாடுகளைச் சந்தையில் ஏலம் விடுவதுபோல் நீக்ரோவர்களை ஏலம் விட் டனர். மாடுகளை நாம் தொழுவத்தில் கட்டி வைப்பதுபோல இவர்களே அமெரிக்கர்கள் கட்டி வைததனர். நாள்தோறும் இக்கருப்பர்கள் வயல்களில் வேலே செய்ய வேண்டும். எதிர்த்துப் பேசினலோ, அல்லது ஆண்டையின் ஆணைக்குத் தலைவணங்க மறுத்தாலோ, மாடுகளை மிலாறில்ை அடிப்பது