பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


  • மனித உள்ளம் கொண்ட ஒவ்வோர் அமெரிக்கனும், கட்சி வேறுபாடின்றி நிற வெறியைப் போக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். வீதியில் நின்று போராடி இனி எந்த அமெரிக்கனும் தன் உரிமையை நிகல நாட்டும் நிலை கூடாது. .
  • இனி வழக்கு மன்றத்தில் தீர்வு காணும் முறையில் சட்டங்கள் இயற்றப் படவேண்டும். ஆனல் சட்டத்தைவிட மக்கட் பண்பும், அறமும் சிறந்தவை என்பதை எல்லாரும் உணரவேண்டும்.
  • தனது தோல் கருப்பாக இருக்கிறது என்ற காரணத் தால் ஓர் அமெரிக்கக் குடிமகன் பொதுவிடங்களிலும், படக் காட்சிக் கொட்டகைகளிலும், கல்லூரிகளிலும், உணவு விடுதி களிலும் ஒதுக்கிவைக்கப்பட்டு உரிமையின்றி வா டு கிருன் என்றல், அந்நிறத்தைப் பெற்றுப் பிறக்க நீங்கள் யாராவது முன் வருவீர்களா ? என்று உங்களைக் கேட்கிறேன். நீக்ரோ வர்களின் அடிமைத் தளை அ று த் து நூருண்டுகள் கழிந்து விட்டன! ஆல்ை அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளே நாம் இன்னும் வழங்காமலிருக்கிருேம்.

நீக்ரோவர்களுக்குச் சம உரிமை வழங்கும் காலம் வந்துவிட்டது. நாடெங்கும் வாழும் நீக்ரோவர்கள் உரிமை வேண்டிக் கிளர்த்தெழுகின்றனர். இக் கிளர் ச் சி யை ப் போராட்டங்கள் மூலமாகவோ, காவற்படையினரின் துணை கொண்டோ, சமரசப் பேச்சின் மூலமாகவோ தீர்த்து வைக்க முயல்வது பேதைமை. அடுத்த வாரம் நீக்ரோவருக்குச் சம உரிமை வழங்குமாறு அமெரிக்கப் பாராளுமன்றத்தைக் கேட் கப்போகிறேன். அவர்களுக்குச் சம உரிமை வழங்கும் சட்டத் தையும் ம ன் ற த் தி ன் துணைகொண்டு நிறைவேற்றப் போகிறேன். இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள், நம் நாட்டிற்கு