பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


இழிவைத் தேடுபவர்கள், அமைதியைக் கெடுப்பவர்கள். இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் உண்மையையும் நேர்மை யையும் வரவேற்பவர்கள்.

"தனிப்பட்ட வணிகத் தல்வர்கள் பலரை நான் நேரில் கண்டு பேசினேன். அவர்களுடைய வான்ணிக நிறுவனங் களில் நீக்ரோவாகளுக்குச் சம உரிமை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். இதுவரை எழுபத்தைந்து நகரங்களில் உள்ள வாணிக நிலையங்கள் நீக்ரோவருக்குச் சம உரிமை வழங்க முன் வந்திருக்கின்றன. மற்ற நகரங்களில் உள்ள முதலாளி கள் தனியாக முன் வந்து உரிமை வழங்கத் தயங்குகின்றனர். எனவே நீக்ரோவருக்கு நாடெங்கும் உரிமை வழங்குமாறு சட்டம் செய்துவிட்டால், யாரும் தயங்கமாட்டார்கள்.

  • .ெ வ ள் ஆள இளைஞரைப்போல் மும்மடங்கு நீக்ரோ இளைஞர்கள் நம் நாட் டி ல் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். திறமையிருந்தும் கல்லூரிகள்ல் படிக்க வகையின்றித் திரிகின்றனர். உரிமையின்றி ஒதுக்கப் படுகின்றனர். இக்கொடுமைகளைப் போ க் கு ம் பொறுப்பு அமெரிக்க நாட்டுத் தலைவரையோ, பாராளுமன்ற உறுப்பின ரையோ மட்டும் சார்ந்ததன்று. அமெரிக்காவில் பிறந்த ஒவ் வொரு குடி மகனுடைய பொறுப்பும் ஆகும். ஒரு நாட்டின் சட்டம் என்பது துலாக்கோகிலப் போல் நடுநிலைமை வகிப்ப தாக இருக்கவேண்டும். நம் நாட்டுச் சட்டம் நிற வெறியில்ை குருடாகி (Colour blind ) விடக்கூடாது வணக்கம்.

கென்னடி கொல்லப்பட்டாலும், அவர் நீக்ரோவருக்குச் சம உரிமை வழங்க வேண் டு ம் என்று பேசிய பேச்சு, அமெரிக்க மக்களின் உள்ளத்திலே பதிந்து விட்டது. அரசி யலில் துணைத் த ல வ ராக இருந்து பணியாற்றியவரும், இப்போது அமெரிக்க நாட்டின் தலைவராக விளங்குபவருமான லிண்டன் பி. ஜான்சன் அரும்பாடுபட்டுக் குடியுரிமைச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார்.