பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. புகழ்ச் சாவு

கி. பி. 1963 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 22 ஆம் நாள் கதிரவன் நனது செம்பொற் கதிர்களை நீட்டிக்கொண்டு கிழக்கு வானில் தலை தூக்கிப் பார்த்தான். அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளிக்கிழமை அமெரிக்க வரலாற்றில் குருதிக் கறை படிந்த நாள் ஜாக்சன், அப்ரகாம் லிங்கன், மெக்கின்லி ஆகிய அமெரிக்கத் தலைவர்கள் வெள்ளிக்கிழமையில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கத் தலைவரான ஜான் பிட் ஜெரால்டு கென்னடி, அன்று அதிகாலையில் எழுந்தார் ; போர்ட்வொர்த்தில் நடந்த காலை விருந்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். வானம் மெல்லத் தூறிக்கொண் டிருந்தது. கூட்டம் முடிந்ததும் வான ஊர்தியில் அவர் தம் மனைவியுடன் ஏறி டெக்சாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான டல்லாசை நோக்கிப் புறப்பட்டார்.

டல்லாஸ் நகரம் முரட்டுத்தனத்திற்குப் பெயர் பெற்றது. ஓராண்டில் இங்கிலாந்து நாடு முழு வ தும் நடைபெறும் கொலையைவிட அதிகமாக, இந்நகரில் நடைபெறுவதாகக் கணக்கிட்டிருக்கிருர்கள். அமெரிக்கத் தூதரான அட்லாய் ஸ்டீவன்சன் ஒரு திங்களுக்கு முன் இந்நகரில் சுற்றுப்பயணம் செய்தபோது, இந்நகரில் வாழும் எதிர்க் கட்சிக்காரர்கள் அவரைக் காறித் துப்பித் தாக்கியிருக்கிருர்கள். ஏழு திங்கள் களுக்கு முன் எட்வின் வாக்கர் என்ற அரசியல் தலைவரை இந்நகர் மக்களில் ஒருவன் மறைந்திருந்து சுட்டான். நல்ல வேளேயாகக் குண்டு குறி தவறிவிட்டது. மூன்று ஆண்டு களுக்கு முன் பொதுத் தேர்தலின்போது லிண்டன் பி. ஜான் சனும் அவருடைய மனைவியும் கென்னடிக்கு ஆதரவு திரட்டு வதற்காக இந்நகரம் சென்றிருந்தனர். தங்கள் விடுதியின்