பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த உந்து வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பியது. திறந்த உந்து வண்டியில் நின்ற வண்ணம் புன் சிரிப்போடு கையை ஆட்டிக்கொண்டு வந்தார் கென்னடி. திடீரென்று வேட்டுச் சத்தம் கேட்டது. இரண்டு குண்டுகள் தொடர்ந்து கென்னடியின் தலையில் பாய்ந்தன. ஒரு கு னின் டு மூளையைத் துளைத்துக்கொண்டு தொண்டையிலும் பாய்ந்தது. ஒ என்று கதரிய வண்ணம் தொண்டையைக் கையால் பற்றிக்கொண்டு அருகிலிருந்த தமது மனைவியின் மடியில் வீழ்ந்தார் கென்னடி.

  • ஐயோ கடவுளே ! எனது கணவனைக் கொல்லுகின் ருர்களே ! ஐயோ " ஜாக் ! ஜாக் ! ’ என்று கதறி துடித் தாள் ஜாக்குலின். அ வ ள் கையிலிருந்த மலர்ச்செண்டு கீழே விழுந்தது.

மூன்ருவது குண்டு அருகிலிருந்த ஆளுநர் கான்னல் லியின் தோள் பட்டையில் பாய்ந்து, அவ்வெலும்பை முறித்து, மூன்று விலா எலும்புகளை நொறுக்கி, நுரையீரலேத் துளைத்து, வலக்கை மணிக்கட்டில் பாய்ந்து, இறுதியாக இடக்கணுக் காலில் சென்று தங்கியது. ஐயோ! நம் எல்லாரையும் கொல்லப் போகிறர்கள்.’’ என்று கதறிக்கொண்டு அவர் சாய்ந்தார். -

கென்னடியைத் தாங்கிக் கொண்டு மூன்றுகல் தெச அல விலிருந்த பார்க்குலாந்து ெம மோரிய ல் மருத்துவமனைக்கு உந்து வண்டி விரைந்து செலுத்தப் பட்டது. கென்னடியைப் பிழைக்க வைப்பற்காகத் திறமை மிக்க மருத்துவர்கள் பலர் கூடி அரை மணி நேரம் போராடினர். சரியாகப் பிற்பகல் ஒரு மணிக்குக் கென்னடியின் ஆவி உடலை விட்டுப் பிரிந்தது. டெக்சாஸ் மாநில ஆளுநர் காப்பாற்றப் பட்டார்.

  • ஜாக் என்பது கென்னடியின் செல்லப்பெயர். ஜாக்கு லின், கென்னடியை ஜாக் என்றுதான் அழைப்பது வழக்கம். கென்னடி தமது மனைவியை ஜாக்கி என்று அன்பு பொங்க அழைப்பது வழக்கம். கெ-11