பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


கென்னடியின் கொலைக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. கென்னடியைச் சுட்டுக் கொன்றதற்கு முழுக்க முழுக்க ஆஸ்வால்டுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. கென்னடியைச் சுட்டுக் கொல்லும் படி அவனைத் தூண்டியது எது ? திரிபுணர்ச்சி கொண்ட உள்ளம்தான். அவன் உள்ளத்தில் திரிபுணர்ச்சி தோன்றி வளரக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தனர். ஆஸ்வால்டு இளமையில் தந்தையை இழந்தவன். அவனு டைய தாயின் உழைப்பால் வளர்ந்தவன். இளமையிலி ருந்தே வறுமை அவனுடைய அறிவை முடம் செய்துவிட்டது. எப்பொழுதும் தனது வறுமையை எண்ணியே அவன் வாடி யிருக்கிருன். பள்ளியில் படித்தபோதும் சரி, கப்பற்படையில் பணிபுரிந்த போதும் சரி, யா ரி ட மு. ம் ஒட்டாமல் அவன் ஒதுங்கியே வாழ்ந்திருக்கிருன் ; எப்பொருளையும் வெறுப் புணர்ச்சியோடு நோக்கி வந்தான். தன்னையே கூட வெறுக் கும் தன்மை அவனிடத்தில் இருந்தது.

செல்வர்களின் ஆடம்பர வாழ்வும், தனது ஏழ்மையின் இழிவும் அவனே ஆத்திரக்காரகை மாற்றிவிட்டன. காரல் மார்க்ஸின் நூல்களேப் படிக்கும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. உடனே பொதுவுடைமைக் கொள்கையில் திடீ. ரென்று பற்று ஏற்பட்டு, உருசிய நாட்டிற்குச் செல்லவேண் டும் என்று எண்ணின்ை ; அரசாங்கத்தாரின் ஒப்புதலும் கிடைத்தது ; உருசிய நாட்டில் குடியேறிவிட்டான் , அங்கு மருந்தகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மெரீன என்ற உருசிய மாதை மணம் புரிந்துகொண்டான். தொழிற்சாலை ஒன்றில் அவனுக்கு வேலையும் கிடைத்தது, அமெரிக்கக் குடி யுரிமையை ஒதுக்கிவிட்டு, உருசியக் குடியுரிமை பெறவேண் டும். என்ற விருப்பம் அவனுள்ளத்தில் ஏற்பட்டது. ஆல்ை உருசிய அரசாங்கத்தார் அவனுக்குக் குடியுரிமை வழங்க மறுத்துவிட்டனர்.

சில நாட்களில் உருசிய நா ட் டு வாழ்க்கையில் அவனுக்குச் சலிப்பேற்பட்டுவிட்டது. அந்நாட்டின் கட்டுப் பாடான வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. தன் மனைவி