பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


யோடு உருசிய நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவை அடைந்தான், ' உருசியப் பொது உடைமை ஆட்சியின் கட்டுப்பாடும், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. சிறந்த துப்பாக்கி ஒன்றை நான் சொந்தமாக வைத்துக்கொள்ள அந்நாட்டு அரசாங்கச் சட்டம் இடந்தரவில்லை என்று தனது டல்லாஸ் நண்பன் ஒருவனிடம் ஆஸ்வால்டு ஒரு முறை கூறியிருக் கிருன்.

அமெரிக்கா திரும்பிய ஆஸ்வால்டு வயிற்றுப் பிழைப் புக்காக எத்தனையோ பணிகளில் ஈடுபட்டான். எதிலும் நிலத்திருக்க அ வ ைல் முடியவில்லை. சிறிது நாட்களில் அவன் தனது உருசிய மனைவியின்மீதும் வெறுப்புக்கொண் டான். மேற்கூறிய நிகழ்ச்சிகளிலிருந்து ஆஸ்வால்டு ஓர் அவசர அறிவு படைத்தவன் என்பதும், திரிபுள்ளம் கொண் டவன் என்பதும் தெளிவாகப் புலப்படும்.

ஆ ஸ் வா ல் டு உருசிய நாட்டுப் பொதுவுடைமை அரசாங்கக் கட்டுப்பாடுகளே வெறுத்தான். ஆனால், பொது வுடைமைக் கொள்கையின்மீது அ வ னு க் கு அளவற்ற பற்றுண்டு. தன்னை ஒரு மார்க்சீய வாதி என்று அவன் பெருமையோடு கூறிக்கொள்வது வழக்கம். கியூபா நெருக் கடியின்போது காஸ்ட்ரோவின் அனுதாபியாக அவன் விளங் கின்ை என்று ஆஸ்வால்டின் நண்பர்கள் குறிப்பிட்டனர்,

பொதுவுடைமைக் கொள்கையின்பால் அவன் கொண் டிருந்த அளவிறந்த பற்றும், கென்னடி செல்வக் குடும்பத் தைச்சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட வெறுப்பும் ஆஸ்வால்டைக் கொலைக்காரகை மாற்றி விட்டன என்று சொல்லலாம். கென்னடியின் அரசியல் போக்கும் இவனுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.