பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இறுவாய்

கென்னடியின் சாவுக்குக் கென்னடியே ஒரு விதத்தில் காரணம் என்று சொல்லலாம். சரியாக இருபது ஆண்டு களுக்கொருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் துப்பாக்கியில்ை தாக்கப்பட்டனர். அவ்வாறு தாக்கப்பட்ட அமெரிக்கத் தலைவர்கள் :

1, ஹாரிசன் - கி. பி. 1840 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்

கப்பட்டார். 2. அப்ரகாம்லிங்கன் - கி. பி. 1860 ஆம் ஆ ண் டு

தேர்ந்தெடுக்கப்பட்டார். 3. கார்பீல்டு - கி. பி. 1880 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்

கப்பட்டார்.

4. மெக்கின்லி - கி. பி. 1900 ஆம் ஆண்டு இரண்டாம்

முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5. ஹார்டிங் - கி. பி. 1920 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்

கப்பட்டார். 6. பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் - கி. பி. 1940 ஆம்

ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கூறிய தலைவர்களில் பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் மட் டுமே உயிர் பிழைத்தார். மற்றவர்களெல்லாம் இறந்துவிட் டனர். அடுத்தாற்போலச் சரியாக இரு பதா ண் டு க ள் கழித்துக் கி. பி. 1960 ஆம் ஆண்டு கென்னடி அமெரிக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேர்ந்தெடுக் கப்பட்டவுடன், மிகவும் பாதுகாப்போடு இருக்க வேண்டு மென்று பத் தி ரி ைக க ள் எச்சரிக்கை செய்தன. உலகத் திலேயே மிகுதியாக இன்னல் சூழ்ந்திருக்கும் அரசியல் தலை வர் கென்னடியே என்று ஓர் அரசியல்வாதி கட்டுரை யொன்று எழுதி வெளியிட்டிருந்தான்.

கென்னடி அமெரிக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஆண்டே 870 அச்சுறுத்துக்கடிதங்கள் அவருக்கு வந்தன. கென்னடி ஹவுஸ்டன் நகருக்குச் சென்ற நாளில், கென்னடியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தி ஐந்து முறை தொலைபேசியின் மூலம் அவ்வூர்க் காவல் நிலைய அதி காரியிடம் யாரோ பேசினர். குண்டு துளைக்க முடியாத மேல்