பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


மூடியோடு கென்னடி உந்து வண்டியில் செல்வது நல்லது என்று யாரோ ஒரு மா து தொலைபேசியில் எச்சரிக்கை செய்தாள்.

ஆனல் கென்னடி இவ்வச்சுறுத்தல்களை எப்போதும் பொருட்படுத்தியதில்லை. அமெரிக்க நாட்டுத் தலைவர் ஏறிச் செல்லும் உந்து வண்டி, நகரின் மிக நெருக்கமான பகுதி களில் சென்ருல்கூட, எவ்விதப் பாதை விதிக் கட்டுப்பாடு களுக்கும் உட்படாமலும், நிற்காமலும் செல்லலாம் என்ற விதி யுண்டு. ஆனல் .ெ க ன் ன டி நெருக்கடியான இடங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வண்டியை நிறுத்திச் செல்லு மாறு கட்டளையிடுவது வழக்கம், கென்னடி மெய்க்காப்பாளர் துணையின்றித் தனியேகூடச் சில சமயங்களில் சென்று விடு வது வழக்கம். உலகிலேயே வெள்ளை மாளிகை மெய்க்காப் பாளர் படைதான் மிகவும் சி ற ந் த து . இவர்களாலேயே கென்னடியைக் காப்பாற்ற முடியவில்லை.

துப்பாக்கியை விட்டுப் புறப்பட்ட குண்டுகள் கென்ன டியின் தலையில் பாய்ந்தன என்று கூறுகின்றனர். அப்பா ழும் குண்டுகள் கென்னடியின் தலையில் மட்டுமா பாய்ந்தன? உலகில் வளர்ந்து வரும் நாகரிகத்தின்மீது பாய்ந்தன. நல்ல வர்கள் உள்ளத்தில் பாய்ந்தன. மலர்ந்துவரும் மனிதத் தன்மையின்மீது பாய்ந்தன. உரிமை பெறுவதற்காக உரத்த குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் நீக்ரோவர் குரல்வளையில் பாய்ந்தன. ஏந்திய கையுடன் கடனுக்காகக் காத்திருக்கும் ஏழை நாடுகளின் இதயத்தில் பாய்ந்தன.

கென்னடியின் இறப்பைப் பற்றி எண்ணும்போது, நம் குடும்பத்தைச் சேர்ந்த உற்றர் யாரோ இறந்துவிட்ட உணர்வு தான் எல்லாருக்கும் ஏற்படும். கென்னடி கொலை செய்யப் பட்ட நிகழ்ச்சியை நான் எழுதும்போது, என் கண்ணில் வழிந்த கண்ணிரை என்னல் தடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆம் கென்னடிக்கு நாம் கண்ணிரைத்தான் காணிக்கை யாக்க முடியும் ! நம்மால் அப்பெரு மகனுக்குச் செய்யக்கூடிய அஞ்சலி அதுதான் !

வாழிய கென்னடியின் புகழ் !