உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ.வி.பி. ஆசைத்தம்பி நான் எங்களை சென்னை பெனிடன்சியர்க்கு கொண்டு சென்றளர். கீழே ஆறு அறைகளும், மாடியில் ஆறு அறைகளும் உள்ள குவாரண்டைனில் எங்களை 10 நாள் ரிமாண்டில் வைத்தார்கள். ரிமாண்டில் இருந்தததால் சில வசதிகள் செய்து கொடுத்தனர். ஜூலை 17 வெளியே விடப்பட்டோம். 30உ பிரதம் மாகாண மாஜிஸ்ட்ரேட், கோர்ட்டை சிறையாக்கி கோர்ட் கலையும்வரை தண்டனை தந்தார். இதோடு எங்கள் சிறைவாழ்வு முடிந்துவிட்டது என்று நாங்கள் கருதவில்லை. இன்னும் எத்தனை எந்தெந்த ஜெயில்களோ-யார் கண்டது.. ..... தடலையோ- ஜெயில் என்பது அரசியல் வாதிகளுக்கு மாமியார் வீடு தான். அடிக்கடி அரசியல்வாதிகளுக்கு அழைப்பு வரும், திரும்பிவரும்போது, அனுபவம் என்ற மனைவி கூடவே வருகிறாள். மனைவி வாழ்க்கைத் துணைவிதான். அடிக்கடி சிறை செல்லும் தைரியத்தை அந்த அனுபவ மனைவி ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஊட்டுகிறாள். அரசியல்வாதி மோட்ச ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே பாடு படுகிறான். இடையிலே. இந்திய சிறைச்சாலைகளைப் போன்ற நாகங்கள் எதிர்ப்படுவதிலே ஆச்சரியமே இல்லை. 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/61&oldid=1735800" இலிருந்து மீள்விக்கப்பட்டது