பக்கம்:கேட்பாரில்லை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

உபதேசங்களும் பிரார்த்தனைகளும் தடுக்கிற அளவைவிட அதிகமாகவே ஒரு கலப்பை தடுக்க முடியும். உலக ஆரம்பத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட பிரார்த்தனைகள் சாதித்ததைப் பார்க்கினும் அதிகமான வியாதிகளைப் புட்டி மருத்து சுலபத்தில் குணப்படுத்திவிடும்.’


இவ்வளவு அழுத்தமாக உண்மைகளை எடுத்துச் சொல்லி வருபவர்கள் பலர். என்றாலும் சிந்தனையின்

ஆராய்ச்சி மொழிகளைக் கேட்பாரில்லை. கேட்டு ஆராய முன் வருகிறவர்களும் அதிகமில்லை. இதையும் சிந்தனையாளர்களும் உணராமலில்லை - என்றாலும், தங்களுக்குச் சரியென்று தோன்றியதை அவர்கள் சொல்லிக்கொண்டே தானிருப்பார்கள்.

முன்னைவிட அறிவின் ஒளி இப்பொழுது அதிகம் பரவியிருக்கிறது. எனினும் வாழ்வில் இனிமை புகுத்தும் அளவுக்கு எங்கும் வியாபகமாக வில்லை. வாழ வழி காட்டக் கூடிய கல்வி போதிக்கப்படவேண்டும். வாழ் வின் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கும் திறமையை பலப் படுத்துங் கல்வி தேவை. வீண் பட்டப்படிப்புகளால் பயனில்லை என்பது நன்கு தெளிவாகி வந்திருக்கிற விஷயம்.

அறியாமையும் மூடநம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டுமெனில்-அவை மாய்த்தொழிந்து போகவேண்டுமெனில்-நாட்டில் உண்மையான கல்வியறிவு வளர வேண்டும்.

ஏட்டிலே எல்லாவற்றையும் படித்து விட்டு, கிரகணத் தன்று தர்ப்பணம் செய்யத் தூண்டுகிற மனோபாவமும், அமாவாசை யன்று விரதம் இருக்கவேண்டும்; கிரகணம் பிடித்தால் சாப்பிடக்கூடாது - சாப்பிட்டால் விஷம் இலையில் தண்ணீர் தெளியாமல் சாதம் கறிவகைகளைப் பரிமாறிச் சாப்பிட்டால் ஊமைப் பிள்ளை பிறக்கும் என் பன போன்ற மடத்தனக் கருத்துக்களை வளர்க்கும் பண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/10&oldid=1395180" இலிருந்து மீள்விக்கப்பட்டது