பக்கம்:கேட்பாரில்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது.பூர்விக நம்பிக்கைகள் , காட்டுமிராண்டித்தன கொள்கைகளில் நமக்கு அலுப்புத் தட்டி விட்டது. வாழ்வின் தவறுகளிடையே, இருளினூடே உண்மை ஒளியைக் காண்பதைவிட உயர்ந்தது எதுவுமில்லை.முக்கியமானது வேறெதுவுமில்லை. உலகின் அறிவுக்களஞ்சியம் உண்மைதான்.

எல்லாத் தொழில்களினும் மேம்பட்டது உண்மையைத் தேடி உணர்வதேயாகும். 

முன்னேற்றத்தின் அடிப்படை ,மேல்கட்டுமானங்கள், தங்கமுலாம் தகதகக்கும் உச்சிக் கோபுரம் எல்லாமே உண்மைதான். ஆனந்தத்தின் அன்னை உண்மை .நாகரிகப்படுத்துகிறது உண்மை.உயரச் செய்கிறது புனிதமாக்குகிறது அது.மனித உள்ளத்திலே முளை விடுகிற ஆய்வகங்களில் எல்லாம் பெருமை வாய்ந்தது உண்மையை உணரவேண்டும் என்பதே.



நல்லது செய்ய நயம் மிகுந்த சக்தி தருகிறது.உண்மை. : அதுவே வாள். அதுவே கேடயம். அதுவே புனிதமான ஆன்ம ஒளி.

ஒரு உண்மையை உணர்ந்து சொல்கிறவன் பேரொளிப் பந்தம் ஒன்றை 'ஏற்றி வைத்த' வனாகிறான்.

உண்மை கண்டு பிடிக்கப்படுவது ஆராய்ச்சியினால்,

பரிசோதனையால், பகுத்தறிவினால். x தனது ஆர்வமும் திறமையும் இடம் கொடுக்கிற அள விற்கு ஆராய ஒவ்வொரு மனிதனும் அ னுமதிக்கப்பட வேண்டும், உலக இலக்கியம் முழுவதும் அவனுக்குக் கிடைக்க வேண்டும். அவற்றிலே தடைப்படுத்தப் பெற். றவை, அடிக்கப்பட்டவை, பதுக்கப்பட்டவை, என்கிற விவகாரங்களே கூடாது. அறியக் கூடா த அளவுக்குப் பவித்திரமானதாக அல்லது பாபமானதாக உள்ளவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/13&oldid=1395232" இலிருந்து மீள்விக்கப்பட்டது