பக்கம்:கேட்பாரில்லை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீ.....பட்டினி....உணவில்லை .... . உணவில்லை.....பணமில்லை-ஆகவே மகிழ்வில்லை வாழ்வில்லை. வாழ வழியில்லை. உயர்வில்லை.

கவலை வளர்கிறது. சோகம் மிக ஓங் குகிறது


நோய்களைப் போலவே, கொலை களவு முதலிய குற்றங்களும் வளர்கின்றன.


தேனும், பாலும் பெருகி ஓடுகிறதாகப் படித்திருக் கிறோம், நீர் வளம், நிலவளம், முதலியவை யெல்லாம்: நிறைந்த வளநாடு நாம் வாழும் நிலமெனக் கேட்டிருக்கிறோம். அர்த்தம் புரிந்தோ புரியாமலோ திரும்பத் திரும்பப் பாடியிருக்கிறோம், பாட்டுக்காரர்களும், ஏட் டுக்காரர்களும், பிரசங்கிகளும் இன்னும் எவ்வளவோ அற்புதங்களைப் பற்றி யெல்லாம் அளந்திருக்கிறார்கள்.

பசித்தவன் பழங் கணக்கைப் பார்த்தான் என்று கதையிலே, வேண்டுமானால் நாம் கூட இஷ்டப்பட்ட போதெல்லாம் புரட்டிப் படித்து நீட்டி முழக்கி மகிழ்ந்து போகலாம்.

ஆனால், என்ன பிரயோசனம் ? --. முந்திய கவிகளுக்குப் பாட வாயுப்புக் கிடைக்காமல் போன பொன்னான பாக்கியம் இன்றுள்ளவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. எல்லோரும் கண்ணீர் விட்டுக் கதறி

வளர்த்த உரிமை உணர்வினால் நாட்டு மக்களுக்கு சுதந் திரம் கிடைத்து விட்டது. நாடாள்வோர் நம்ம வர்கள், -

மகிழ வேண்டியது தான்.

ஆனால், மக்களின் முகத்திலே மலர்ச்சியில்லை, உள் ளத்தில் மகிழ்வு அரும்பவில்லை யாதலால், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/4&oldid=1394294" இலிருந்து மீள்விக்கப்பட்டது