பக்கம்:கேட்பாரில்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகரித்து வருவதை உணரலாம். பத்திரிக்கைச் செய்திகளாக வருபவை இவ்வளவு. பத்திரிகைகளை எட்டிப் பாராமலே கிடக்கும் குறறங்கள்- நாட்டில் நடக்கும் குற்றங்கள் எத்தனை மடங்கு !

மனிதவர்க்கத்தின் கறைகளாக,

சமுதாயத்தின் ஊழல்களாக, மனிதனின் வெறித்தன வியாதிகளின் சின்னங்களாக இப்படி இவை பெருகுவது ஏன்? அமைதியையும் சமூக நலனையும் நாட்டு மதிப்பையும் ,


கெடுக்கும் கலங்கங்கள் இவை, மக்களின் மனோவியாதியாய்

பிறந்து பலர் வாழ்வின் நலம் கெடுக்கும்  கொடுமைகளாகப் பரிணமிக்கிற இவை வரவர வளர்வதன் காரணம் என்ன ?

வாழ்விலே இனிமை இல்லை. சூழ்நிலையில் பசுமை இல்லை. சரியாக வாழ வசதிகள் இல்லை.நன்றாக வாழ வழி தெரியவுமில்லை. பொருளாதார மாந்தம், வாழ்க்கைக் கொடுமைகள் சுற்றுச்சார்பினரின் பழிப்பு,கண்டனம்,பரிகாசம்,போன்ற எத்தனையோ காரணங்களோடு மனிதப்பண்பு வற்றிப் போனதும்

சேர்க்கப்படலாம்.

அறிவு வளர்க்கப்படவில்லை. அறியாமை தான்

பலமாகப் பற்றிக் கொண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. இன்று கற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறை.

வாழ்வதற்குரிய பாதை செய்வதில்லை என்பதைப் பலரும் பல வருஷங்களாகத் தான் சொல்லி வருகிறார்கள். எனி னும் மாறுதல் பிறக்கவில்லை.

நாட்டிலே அறியாமை கொலுவிருக்கிறது. அறியா மையை பூஜிக்கும் பெரும்பலரின் போக்கு ஒரு சிலருக்கு நல்ல மூலதனமாகப் பயன் படுகிறது. *

மக்களில் பெரும்பாலோரது அறியாமை ஒரு சிலரை பெரிய மனிதர்களாக்கி விடுகிறது. பலரை சுரண்டல் வாதிகளாக, கறுப்புச் சந்தைக் கழுகுகளாக, கொள்ளைக்காரர்களாக வளர்த்து விடுகிறது. எத்தர்களை பகட்டாக வாழத் தூண்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/7&oldid=1395182" இலிருந்து மீள்விக்கப்பட்டது