பக்கம்:கேரக்டர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கமிஷன்' குப்பண்ணா

"குப்பண்ணாவை யாராவது பார்த்தீர்களா,சார்! ஆளே அகப்பட மாட்டேங்கிறானே?"

"எந்தக் குப்பண்ணா? கமிஷன் குப்பண்ணாவா? இத்தனை நேரம் இங்கேதானே இருந்தான்? இப்பத்தான் யாரோ ஒருவர் வந்து அவனைக் காரில் அழைத்துக்கொண்டு போனார்."

குப்பண்ணாவைத் தேடிக்கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பான்.

"என்ன சார் பண்றது? சப்ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம். வக்கீல் வீட்டுப் பையனுக்குக் காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்குக் கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணா தான்; முடியாதுன்னா யார் விடறா?" என்பான் குப்பண்ணா.

இந்தச் சமயம், 'குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டு வருவார் ஓர் ஆசாமி.

"என்ன சங்கதி, ரிஸ்ட் வாட்ச் விஷயந்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்" என்று அவரை ஓட்டலுக்குள் அழைத்துச் சென்று, "எங்கே கடியாரத்தைக் காட்டுங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/140&oldid=1481409" இலிருந்து மீள்விக்கப்பட்டது