பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தலையிலடித்துக் கொண்டாள். கம்மையா சொன் னேன்? ராமா, நாம் இங்கிருந்து புட்டுக்கனும்'.

'ஒ'

"அந்த 'ஒ'வுக்கு என்ன அர்த்தம்'

'உஷ்'l

பித்தளைப் பாத்திரத்தில் மழை ஐலம் விட்டு விட்டு இனிமையான சொட்டு சொட்டு.

'ப்ரபு”,

கொட்டின தேன் மேல் உதிர்ந்து ஒட்டிக் கொண்ட பூவிதழ்கள்.

“இப்படித்தான் சில சமயங்களில் அவனுக்குத் தூக்கம் வராவிட்டால் கிட்டாரைத் தட்டிண்டிருப்பான்.'

இட்ட கோலம் சோம்பல் முறித்தாற் போல் முனகல் கள். -

இருளோடு இழைந்த சிறுத்தை புள்ளிகள், மீசை அசைவுகள், திடீர் திடீர்ச் சீறல்...

அடங்கி ஒயும் உறுமல்கள், அதிலிருந்து வெடிக்கும் தும்மல்கள்...

இத்தனையும் ஒன்றுசேரப் பார்க்கும் ஒரே கோடருவி.

அதனுள் ஆங்கும் சங்கும், ஒற்றையும், இரட்டையு மாய் முளைத்துப் பூக்கும் லேக் குபிர்குபிர்கள்.

'மதுரம், ப்ரபு என்ன வேதனைப் படுகிறான். வேதனை உறுத்துகிறான்; என்னத்தைத் தேடுகிறான்?”

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து அர்த்தம் பண்ணக் கேட்க வேண்டாம். பண்ணின் அர்த்தமும் உங்கள் ரெண்டு.