பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9?

'அங்கு என் வாழ்க்கை மட்டம் உனக்குத் தெரியாது. ஏதோ வீம்புக்கு வாழறேன். நீ தாளமாட்டாய். அந்தக் களனே வேறு.'

'அப்போ அப்படியாவது அங்கே இருந்தாகணுமா? நீங்கள் திரும்பிட வேண்டியதுதானே! உங்கள் பிள்ளைகள் உங்களைப் போபோன்னு விரட்டினாளா? நீங்களாத் தானே ஒரு நாள் திடீர்னு காணாமல் போயிட்டேள்? உங்களைத் தேடாத இடம் பாக்கியில்லை. குழந்தைகளும் நாங்களும் எப்படித் தவிச்சுப் போயிட்டோம் தெரியுமா? மூணு நாளைக்கு யார் ஒழுங்கா சாப்பிட்டா? இது வீம்பு பிடிக்கற வயசா உங்களுக்கு: யோசித்துப் பார்த்தேளா? நமக்கு உடல் ஒடுக்கம் ஓங்க ஆரம்பிச்ச பிறகு சிறுசுகளின் தயவு கமக்கு இனி மேல்தான் தேவை.'

'ஒ, உனக்கு எத்தனை காக்குப் பேசும் மடக்குக் கத்தி மாதிரி உன் வாயில் பன்னிரண்டு ப்ளேடா-இன்னும் கூடவா? ஒண்னு தெரியறது. என்னை உடம்புன்னு ஏமாற்றி வரவழைத்து விட்டாய்.'

'அதில் என்ன ஏமாத்தல் இருக்கு உடம்பு எனக்கு சரியாத் தானில்லை."

"இருக்கலாம், ஆனால், உன் உண்மைக் காரணம். சாமாவின் கலியாண சமயத்துக்கு, மஞ்சள் குங்குமத் துடன் தனியா சிற்க முடியுமா!புருஷன் என்கிறபேரில் ஒரு தவிட்டுப் பொம்மையானும் உன் பக்கத்தில் சின்றால்தான் உனக்கு மவுசு-அல்லவா?”

பதில் சொல்லத் தவித்தாள். ஆனால் வாய் வரவில்லை. 'குபுக் குபுக் குபுக் கிதார் கொந்தளித்தது.

கான் இரக்கமற்றுத் தொடர்ந்தேன், “என் மேல்தான் தப்பு. நீ வரவழைத்தால் நான் வரணுமா? இத்தனை

கே. எ-?