பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ங்ாட்கள் ஒண்னுமில்லாமல், இன்னிக்கு உனக்குப் புரைக் கேறினால் அது என்ன நினைப்பால்'என்று நீ சொன்னால் நான் நம்பனுமா? காரணம், நீ பண்ணின புளிக் கீரையா யிருக்கும். அந்த இடத்தில் தான் பழக்கத்தின் பலவீனம் ஓங்குகிறது. மதுரம், நாம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் பாசம் அன்பு என்பதெல்லாம் பாதித்த ஒரு சூழ்நிலையின் பழக்க தோஷம். சித்த கித்தம் சில முகங்கள், சில கடமாட்டங்கள், நடத்தைகளுக்கு மனசு பழக்கப் பட்டு விடுகிறது அவ்வளவு தான். அதுவேதான் நுகத்தடியாகவும் மாறி விடுகிறது. உள்ளே இருக்கவும் முடிய வில்லை. வெளியே வரவும் தைரியமில்லை. என் மாதிரி லக்னத்தில் குரு ஜாதகங்கள் ஒன்று அரைக் கேஸ். திமிறும் போது கெட்ட பேரை வாங்கிக் கொள்கிறோம்.'

'உங்கள் கொடுமை கொஞ்சம் கூட மாற வில்லை, இந்த வயசில் இந்தப் பிடிவாதம் வேண்டாம் உங்களுக்கு."

“எல்லாம் நடக்கற வரையில் தான். செல்லும் வரை என் செயல், மிச்சம் நாராயணன். செத்த பிறகு, கார்ப்பொரேஷன் தொட்டியில் எறிஞ்சாலும் சரி, பூப்பல்லக்கு கட்டினாலும் சரி. பிணத்துக்குத் தெரிஞ்சு என்ன ஆகனும்? அதுக்கு இரண்டும் ஒண்னுதான்.'

'பஞ்ச பாண்டவா மாதிரி, மூணு அர்ச்சுனனைப் பெத்துட்டு இந்த அதிகப் பாட்டு ஏன் பாடனும்?”

"சரியாப்போச்சு, நெருப்பு குச்சியை யார் கிழிச்சு வெச்சாலும் எரியும்னு என் அம்மா ஒரு சமயம் எனக்குச் சொல்லியிருக்கா. இத்தனைக்கும் நான் என் அம்மாவுக்கு ஒரு பிள்ளை. நீ மூணுக்குக் கணக்கு பண்ணப் போயிட்டே!’

நாம் என்ன பேசிண்டிருக்கோம்?"