பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it}{}

கதவைத் தட்டினேன். ஊஹாம். தானாகவன்றி, தட்டித் திறவாது. .

'ப்ர்பூ ப்ரபூ!'-ஊ-ஹாம். என்னிடத்துக்குப் போய் கட்டிலில் அமர்ந்து தல்ையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டேன்.

“என்ன அக்ரமம்! கண்ணெதிரிலேயே-அசலாத்து சொத்து-அடிவயத்தில நெருப்பு, ஐயோ என்னால் தாங்க முடியல்லியேl-'

துணுக்குத் துணுக்காக வார்த்தைகள் என் நெற்றிப் பொட்டைத் துருவின. எரிந்து விழுந்தேன். 'எறியற நெருப்பில் எண்ணெயை விட்டுண்டு...'

நீங்கள் அடக்கினது போதும்.’’ சட்டென என் பக்கம் திரும்பிச் சீறினாள். பிறத்தியார் நகையைப் போட் டுண்டு கலியாணத்துக்கு வந்து மினுக்கற மாதிரி! நீங்கள் இவளை இங்கு கொண்டு வராட்டா என்ன? உங்கள் சமாசாரம் எனக்குத் தெரியாதா என்ன? ஐயே, ஆண் களே உங்களுக்கு இதில் என்ன பெருமையோ?” தலையில் அடித்துக் கொண்டாள்.'இதிலே வயசாயிடுத்துன்னுவேறே சொல்லிக்கிறேள். மீசை கரைச்சுப் போச்சேன்னு பாடி வேறே என்னை எசறேள். ஆனால் இதெல்லாம் சபலம் இல்லைன்னு நீங்கள் மனசார மறுக்க முடியுமா? இதுதான் இன்னும் ஆபத்து, நெருப்போடு விளையாடற சமாசாரம். புலி வாயில் தலையைக் கொடுக்கற சமாச்சாரம் கொடுத் துட்டு அது தலையைக் கிள்ளிடுத்துன்னு குத்தஞ் சொன் னால் என்ன அர்த்தம் புலி சுபாவம் கிள்ளாமல் என்ன பண்ணும்? சுபாவத்தோடு விளையாடலாமா? ஐயோ என்னால் தாங்க முடியல்லியே' வயிற்றைப் பிடித்துக் தொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டாள். "உங்களுக்