பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f03

அவன் தாய் மெச்சிக்கிறது அதைவிடப் பெரிசுதான் ஆமாம், இப்பத்தான் உனக்கு இங்கே பிடிக்கல்லே. என்னோடு வந்துடறேன் எனக்குப் புதுவாழ்வு வேணும்'னே அடுத்தே தராசு எதிர்பக்கம் சாஞ்சாடும் உனக்கு எத்தனை காக்கு மதுரம்?’’

அவள் பதில் பேசவில்லை. அவளுடைய வெறி தணிக் ததுமே ஆயாசம் மேலிட்டு, தரையில் முன்றானை விரித்துப் படுத்து விட்டாள். என்னத்தையோ புரிந்தும் புரியாமலும் முனகிக்கொண்டே, குழறிக் கொண்டேயிருந்தாள். எனக் குப் பயமாய்க் கூடப்போய் விட்டது. காக்கு, கீக்கு இழுத்து விட்டதா?

எத்தனை நாழி இப்படியே இருந்தோமோ?

விடிநேரம் நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். எங்கோ துர, கார், பஸ் சத்தம் கேட்க ஆரம்பித்தாகி விட்டது; பக்கத்தில் பெரிய விடுதியிருக்கிறதோ தெரிய வில்லை. தண்ணிர் பம்பு டாங்குக்கு அடிக்க ஆரம்பித்து விட்டது. கலகல வென்று பால் புட்டிகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக் கொண்டு டிப்போவில் இறங்கு கின்றன.

பக்கத்து அறைக்கதவு மெதுவாக திறக்கும் சப்தத்தில் கிறீச்சிடுகிறது.

ப்ரபு எங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு வாசல்படியில் நின்றான். உதட்டோரம் குழிந்தது.

'ஹல்லோ?”

எழுந்து சென்று கன்னத்தில் ஒரு அறை அறைக் தேன். கன்னத்தைப் பிடித்துக்கொண்டான்.

'திருப்திதானே?"