பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芭。

வைத்தால் இப்போதைய விலைவாசிக்கு நான் எங்கே போவேன்? மிஸ்டர் ஜியார்ஜ் மனசு வைக்கனும். மேலே ஏறி இருப்பதையே அங்கே இங்கே நகர்த்திக் கொஞ்சத் துக்குக் கொஞ்சம் சரி பண்ணினால் உண்டு. அப்படித்தான் செய்யனும். இரண்டு மொங்தைகள் சூத்திரக் கயிரை இழுத்து விடும். ஐயா காயற சமயமாப் பார்த்துத் தூத்திக் கணும். நரகத்துக்கு அவரை நான் இழுத்துச் செல்கி றேனா? ஆமாம். ஆமாம் அவர் ஏற்கனவே பார்க்காத இடமோன்னோ? இனி அங்கு இல்லாத இடம் தான் அவருக்கு நரகம். அவர் அந்தக் கட்டத்துக்கு வந்தாச்சு: ஒரு தடவை ஆஸ்பத்திரியில் சேர்த்து, பத்து நாள் அங்கு தண்ணிக்குப் போட்ட பட்டினியில், நடத்திய சிகிச்சையில், உடல் எல்லாம் ஜன்னி உதறல் கண்டு இந்தத் தடவை தேறினால், இனி தண்ணி பக்கம் தலை வைத்துப் படுப்ப தில்லை என்று பைபிள் மேல் பாதிரியிடம் சத்தியம் பண்ணி விட்டு, குடல் வெந்து போச்செனும் எச்சரிக்கையுடன் மீண்டாச்சு. அப்புறம்: எஸ், அப்புறம் என்ன? சத்தி யங்கள் என்ன சங்கிலியா?

குடிசையைச் சேதம் பாக்கச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஆனால் பார்ப்பாரோ, மாட்டாரோ, இனிமேல் தான் பார்க்க வேணும். குடிசைக்கு சொந்தக்காரர் அவர் தான். எனக்கு வாடகைக்கு விட்ட மறுகாளே, பள்ளத்தாக் குக்கு வெளியே இன்னொரு குடிசை எழும்பத் தொடங்கி யர்ச்சு, ஒலைகளை வெட்டி, வீழ்த்தி-உலகம் படைத்தது எனக்காக- முடைந்து வேய்ந்து-சேறைக் குழைத்து எழுப்பி-அப்படியே கூரைமேலேயே கதகதவென்று, அல்லது சுள்சுள்ளென-போதையில் வித்யாசம் என்ன தெரிகிறது?-புரண்டு-சரிந்து தொப்பென்று கர்டிபோல் கீழே வீழ்ந்து அப்பவும் துளக்கம் தெளியாமல் நெற்றியில் ஒரு முண்டு முண்டிக்கொண்டது-அவருக்கென்ன கவலை?