பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

ரயில் டன்னலுள் புகுந்தது. உடனே விளக்கும் அணைந்தது. ஃப்யூஸ்? அவள் மூலையிலிருந்து அவள் குரல் சொடசொடத்தது.

'சாமிககு சம்சயம் வேண்டா. என்னை விவாஹம் செய்யுன்னு ப்ரபு. வாக்குக் கொடுத்திட்டில்லா. எதுக்கும் ப்ரமாணங்கள் எங்களுக்கு இல்லை. யான் ப்ரபுவோடு வருன்னும், ப்ரபு எங்குபோயும் யானும் வருன்னு பறைஞ் சது. ப்ரபுவுக்கு சம்மதமில்லை. திடீரென்று சிரித்தாள். யாங்கள் ஊணு கழிக்க யான் வேசியாகணும். வேறு ஏதும் யான் அறிஞ்சிட்டில்லாம். யான் சம்மதம். ப்ரபுவுக்கு அவ் வழி சம்மதமிருக்காது. யான் அறியும். என் ப்ராணகதிக்குத் தான் அடைச்சாச்சு. எங்கள் ஒடம் ஒண்னு. எங்களுக்கு மோrம் இல்லா .' -

பிறகு அவள் பேசவில்லை.

o o Ö びQ 孪 {}o

ராக்கண், ரயில் விட்டு அடுத்து ஊருக்குப் பஸ் பிரயாண அலுப்பு இத்தனையிருந்தும் தூக்கம் மறுத்து விட்டது. கயிற்றுக் கட்டிலில் புரண்டு புரண்டு முதுகு கன்றிவிட்டது. ஏதேதோ உருவங்கள், ஜியோமிதி வக்கிரங் கள், சதையும் நரம்பும் உரித்த எக்ஸ்-ரேக் கோடுகள், தந்திக் கட்டான்கள், அருவருப்பும் அச்சமும் ஊட்டும் வித விதமான நுங்கு துரைகள் இமைத் திரையில் தோன்றி, உயிர்கண்டும், நெளிந்தும், பூத்து, பொங்கி, வழிந்து, இழைந்து, மறைந்து மீண்டும் தோன்றி... விழி வலித்தது. நினைவு, விழுந்திருக்கும் அதலபாதாளத்தில் சாவை காடிற்று. போனால் தேவலை போயிட்டால் தேவலை’ -இரண்டு உச்சாடணங்கள் ஜபம் கட்ட ஆரம்பித்து

விட்டன. வாய்விட்டு அலறனும் போல் தோன்றிற்று,