பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

傍

குடிசையின் சனி மூலையில் ஒருபெரிய மண் அடுப்பு, அத்துடன் இழைத்த மேடையுடன் உர்ஸ் எனக்குச் சமையல் செய்து போடணும் என்று பேச்சு. அவளாக ஏற்றுக் கொண்டது தான். அதற்கு வேண்டிய பாத்திரம், பண்டங்கள் மேடை மீதே இருக்கின்றன. ஆனால், பாதி நாளைக்கு-ஒரு தட்டின் மேல் துணியைப் போட்டு மூடி உர்ஸ் கொணர்ந்து விடுவாள்.

-'அம்மை செய்தது”. -'என்ன உர்ஸ், இங்கே கத்தரிக்காய்க் குழம்பு செய்ய நான் சொல்லிக் கொடுக்கிறேன் என்றேனே!”

-கத்தரிக்காய்க் கூட்டான் அம்மையே ஆக்கிட் டி.து.'

என்னவோ காமா சோமா, கோணாமணா கொக்கர மணா, பூண்டு, சோம்பு, வெங்காயம் எது எதில் என்பது கிடையாது. காய்கறித் துண்டங்கள் குழம்புடன் ஒன்று சேராமல், குழம்புத் தண்ணியாய் தான்கள் விரக்தியாய் ஒட்டாமல் தனித்து... பொருமேன், சீமேன், சத்தம் போடேன். ஊஹூம்-அங்த முகத்தின் கிர்ச்சலனம் சற்றே னும் கலங்கினால்தானே! கனத்த ஐலம்...கண்ணில் ஒரு தனிக் கபடு வந்து விடும். அழுத்தம், ஆயிரம் குதிரை கட்டி இழுத்தாலும் அசைக்க முடியாது.

கத்தை நத்தையாக அரை வேக்காட்டில் புழுங்கலரிசிச் சோறு. ஆனால், அதற்கு அவர்களைச் சொல்லிக் குற்ற மில்லை. அவர்களுக்கு அதுதானே பழக்கம். அதுதானே பிடிக்கும். அதுதானே செய்யத் தெரியும்!

கான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது எனக்குக் கிடைக்காமல், எனக்கு வயிறு சிறையாது. மேலும், மோதல் தவிர்க்க என் புத்தக அரனுள் பின் வாங்கி விடுவேன்.