பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

"எஸ். எஸ்!! எஸ்!!!' என்று உள்ளுணர்வு மறுத் துக் கேலி செய்தது. குடிசையின் நான்கு சுவர்களும் தழுவ வேகமாக நெருங்கின. குடிசையின் கூரை மண்டையுள் கேவிற்று; வெளியே ஒடி வந்தார். கால்கள் தாமே ஒடத் தலைபட்டன. விடிவேளையின் முன்னிருட்டு மரங்கள் கிளைகளை ப்ேடித் தம் அடருள் அழைத்தன. பத்தடி கூடத் தாண்டவில்லை.

"எஸ். எஸ். எஸ்il'-கேலி துரத்திற்று.

ஸ்-ஸ்-ஸ்

வலது புறங்காலைச் சீறல் கொத்திற்று.

'அம்மா!' வாய் விட்டு அலறினார்.

'அம்பீ!' வாய்விடாத எதிர் அலறல்.

தடுக்கி விழுந்து, உடலில் மணியாங்கற்கள் குத்தின.

இனி ஒட வேண்டிய அவசியமேயில்லை, கன்றாய்த் தெரிந்தது; இருந்தாலும், எழுந்து உட்கார்ந்து காலைச் சுற்றி இறுக்கிய, இன்னும் இறுகிக் கொண்டேயிருக்கும் முடிச்சைக் கழற்ற முயன்றார், முயன்று கொண்டே இரு

-ந்-ந்-க்

    • w-a*-r** *-«s...

(முற்றும்)