பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

அடுப்பு அடைத்த இடம் போக கூடத்தில், போர் கட்டி, கூறுகட்டி, தனித்தும் பரவலுமாய், புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்,-புத்தகங்கள் பலசாரி. கட்டி லுக்கடியில் இருக்கும். ஒற்றை ஜன்னலில் இருக்கும். ஒரே பெட்டிமேல் அங்கங்கே, எங்கெங்கும்...இடத்தைப் பெருக்கி எத்தனை காலமாச்சோ? (உர்ஸுக்குச் செளகரியம் தான்) அத்தனையுமா படிக்கப் போகிறேன்? ஆனால், புத்தகங் களை இப்படி என்னைச் சுற்றி வழிய விட்டுக் கொண்டு நடுவில் உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோதலைக்குயரத்துக்கு இரண்டு கட்டைப் புத்தகங்கள்-ட்டிப் பதில் எனக்கு ஒரு தனி ஆனந்தம். நான் ஒடிப்போகுமுன் அவர்கள்' என் மேல் கண்ட குற்றங்களில் இதுவும் ஒன்று.

அவர்கள் பாஷையில் நான் இருக்குமிடமெல்லாம் குப்பை கூளம். அவர்கள் படிக்கும், சேர்க்கும் சினிமாப் பத்திரிகை, ஸ்போர்ட் பத்திரிகைகளுக்கு என் புத்தகங்கள் ஈடாகுமா?

மூணுமாதங்கள், ஆறு மாதங்களுக்கொருமுறை கருணாகரனைப் பார்க்க திருவனந்தபுரம் போகும்போதெல் லாம் புத்தகக் கடைகளையும், ப்ளாட் பாரங்களையும் குறையாடுவேன். தவிர கருணாகரனும் அவரிடம் அதற்குள் சேர்ந்து விட்ட புத்தகங்கள், பத்திரிகைகளை வழங்குவார். அவருக்குப் பத்திரிகை ஆபீசுகள் பழக்கம். பிஸினெஸ்மேன் மட்டுமல்ல; அவர் எழுத்தாளரும் கூட. நிறைய வாங்கியும் படிப்பார். உர்ஸ் ஒத்தாசைக்கு வந்து கோணி மூட்டையை இறக்குகையில் அவள் கழுத்து வளைவிலிருந்து இளமை கெடி அடிக்கையில்...

"புஸ்தகம் ஒரு நாள், வீட்டைப் பிடிச்சுண்டு சாமியை வெளியே தள்ளிடப் போறது. ஜாசலில் கயிற்றுக் கட்டி