பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}

அம்மா பேர் காகலக்டிமீ. இதற்கு முன் இங்கு பாம்பு கடமாட்டம் பார்த்ததில்லையா? இனிமேலும் இல்லாமல் இருக்கப் போகிறதா? ஆனால் உர்ஸ் தெரிவித்ததும் மனம் இப்படித்தான் ஒடிற்று.

'ஒ' தன்மேல் சிலுவைக் குறியைச் செய்து கொண் டாள். அப்போ ஸாமி திதி கொடுக்க, வேண்டா? ஞான் கம்பூரி ஸாமியெ அழைச்சு வரட்டோ?”

“சரி”யில் தல்ையை ஆட்டவே பயம். மறுப்பில் அசைக் கவும் பயம்.

ஊமையானேன்.

பிதுர்த் தேவதைகள் பிண்டத்துக்கு என்னை போன்ற வம்சப்ரதிநிதியிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சு கிக்கென்றது. பிதுர்ப் பசி, பிதுர்ப் பட்டினி, பிதுர் சாபம்...

பகுத்தறிவு சாக்கில் எல்லாம் பெரியவர்கள் காட்டும் 'ஜதல்' என்று சவால் அடிக்கலாம். இரண்டு சாஸ்திரி களுக்குத் தக்ஷணை கொடுத்து சாதம் போடுவதற்குப் பதி லாக இருபது ஏழைகளுக்கு பக்தி போஜனம் செய்வது என்று கொடி காட்டலாம். இரண்டுபேர் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடலாம். ஆனால், பரம்பரையாக ரத்தத்தில் ஊறிப்போன பழக்கத்தின் மூட்டதினின்று விடுபட, தப்பி யோட (யாரிடமிருந்து ஒடுகிறாய்?)-தப்பியோடப் பெரிய வர்களே குறுக்கு வழி வைத்திருந்தால்கூட - பெரிய சொர்க்கவாசற் கதவில் வெட்டிய சின்னக்கதவு மாதிரி அவ்வளவு எளிதில் ஏற்க மனம் மறுக்கிறது. கான் ஒழுங் காக எல்லாம் செய்து கொண்டிருந்தவன் தானே! மதுரம் அன்று மட்டும் பாங்காகக் கொசுவம் கட்டி, என் தோள் குறுகுறுக்கப் புல் பிடிக்கவில்லையா? ஓமப் புகையின்