பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

களும், தோரணங்களும், வாழை மரங்களையும் பிய்த்துச் சாய்த்திருந்தன.

லால்பகதுர் சாஸ்திரி தாஷ்கண்டில் மாரடைப்பு. 'மணவறையே பிணவறையாம்'-பழியஞ்சின படலத் திலிருந்து நேர் படப்பிடிப்பு. மக்கள் எல்லாவற்றையும் சினிமா ஷாட்டாகத்தான் புரிந்து கொள்கிறார்கள்.

நான் பாபியென்பதற்கு வேறு ருசு வேண்டுமா? கினைத்துப் பயனில்லை. எனக்கு எப்பவுமே கர்ண சாபம்தான்.

ஆச்சு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஸ்னானத்தை முடிச்சுண்டு திருவனந்தபுரத்துக்குக் கிளம்பியாகணும். இந்த பஸ்ஸை விட்டால், மறு பஸ் மதியம்தான். அதற்குள் எனக்குச் சோம்பேறித்தனம் வந்து விடும்.

காளைக்குப் பார்த்துக்கலாம். ஆனால், பானையில் அரிசி காலி, ட்ப்பாவில் டீ காலி, பேழையில் செல்லி காலி, 'காளை காளையென்று கமனுடை நாளும் வருவது அறியீர்' -சொற்கள் இப்படித்தான் போகின்றனவோ? ஆனால் பொருள் என்னவோ அதுதான். அது பிசக வழியில்லை. எல்லாச் சாலைகளும் சாலைக்கு கடத்திச் சென்று சாலையில் முடிகின்றன.

சென்னையில் கேத்தாஜி சாலை. டில்லி சாந்தினி செளக். மதுரையின் வீதிகள். திருச்சியில் சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி. ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை ஒரே மூச்சில், இந்தத் திருவனந்தபுரம் சாலையைக் காட்டிலும் நீண்ட வீதிகள் இல்லையா?