பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், அந்தந்த ஊர் மக்களுக்கு அவரவர் வீதிகள்

ஒசத்தி.

ஆனால், சாலையும் நீளம்தான். நேரே பத்மனாப

ஸ்வாமி கோவிலில் முடிகிறது.

சாமியும் பெரிசுதான். க்ளைமேட்டுக்கேற்ற சாமி. படுத்திருக்கிறார். மூணுவாயில் கொள்ளவில்லை.

சாலையின் அத்தனை கடைகளிலும் எனக்குக் கருணா கரன் கடைதான் பெரிசு. ஊருக்கெல்லாம் ஒரே காரணம். அவரவர்க்கு அவரவர் காரணம்.

கருணாகரன் கடையில் என் பணத்தைப் போட்டிருக் றேன்.

கருணாகரன் அலுமினியப் பாத்திர வியாபாரம் செய் கிறார். ஒட்டை உடைசல் வாங்கி ஃபாக்டரிக்கு சப்ளை செய்கிறார் (தராசு வேறு). கூடவே, மரச்சொப்புகள், ஒலை முடையல்கள் (கூடை, முறம், வெற்றிலைப் பெட்டி, தாளாக் கூடை இத்யாதி)அம்மி, ஆட்டுக்கல், பத்தமடைப் பாய்- இது என்ன காம்பினெஷன் எனக்குப் புரியவில்லை. ஆனால் வியாபாரம் கல்லா நடக்குது.

நான் கடையுள் நுழையும் போது கஸ்டமரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

வாங்கே ஸார் வாங்கோ, பரவாயில்லே கல்லாவில் ஒக்காருங்கோ. நல்ல உத்யோகம் பார்த்திருக்கேள். நீங்கள் உட்கார்ந்தால் எனக்கு ராசிதான். செளக்யமா? என்ன இளைச்சாப்போல் காட்டறது?’’

கருணாகரன் கன்யாகுமரி ஜில்லா. அவர் எழுத்தைப் பாராட்டி ஒரு முறை அவருக்கு எழுதினதிலிருந்து எங்க எளிடையில் தொடர்பு கண்டது. கட்பு முற்றிற்று.