பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கருணாகரன் எழுத்தில் சித்து, வித்தை, பொடி ஊதல், வேலைப்பாடு எல்லாம் உண்டு. அவர் கதைகள் சிதறின கண்ணாடித் துண்டுகள் போல, தெறித்த பிம்பங் களைக் காட்டிக் கொண்டு லேசான குரூரம் படைத்தவை. ஆயினும் படிக்கச் சுவை. பொடியோ சில்லோ கிழித்தால் ரத்தம்தான்.

வந்த கஸ்டமர் ஏதேதோ சாமான்களை வாங்கிக் கொண்டு, பணத்தை என்னிடம் கொடுக்கிறாள். மழித்த புருவங்களின் மேல் சீரான பென்சில் கோடு வளைவு வரைக் திருக்கிறது. கடை முதலாளியிடம் ஏதோ மலையாளத்தில் பறைகிறாள். இது அசல். எனக்குப் புரியாது. கருணா கரன் பதில் சொல்கிறார். எனக்குக் கைகூப்பிவிட்டுக் கடை யினின்று இறங்குகிறாள். ஜாஜ்வல்யமான புன்னகை. இடுப்பில் விழுந்திருக்கும் ரொட்டி சதை இன்னும் ஊழை யாகவில்லை. கவர்ச்சியாகவேயிருக்கிறது.

நண்பர் என் எதிரில் உட்காருகிறார். பெருமூச்செறி. கிறார்.

'இந்த அம்மை யார் தெரியுமோ? எங்கள் தேச பிலிம் ஸ்டார்-'

“suă5 spei (LUCKY UேY) ! அப்போ நீங்கள் சொன்னதுதான் விலைl'

என் முகத்தில் இடிப்பது போல் கையைக் காட்டிச் சிரித்தார். கல்லாச் சொன்னிங்க போங்க! நீங்கதான் மெச் சிக்கணும். பேரம் பேச அவாளிடம் நாம் கத்துக்கணும். சென்னையில் பனகல் பார்க் மார்க்கெட்டில், காரில் உங்கள் ஸ்டார்கள் வந்து இறங்கி, கொடுத்ததை வாங்கிட்டு சொன்ன விலையைக் கொடுத்துட்டுப் போறாங்களே... அதுமாதிரி கினைச்சுட்டிங்களா? அந்தக் காலமெல்லாம்