பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星6

“எனக்கு என் தெரியனும்? யார் வீட்டுக்குள் கான் துமுைஞ்சாகனும் அவளோடு பேசி ஜெயிக்க முடியாது. பேச்சை ட்ராக் மாற்றிக் கொண்டு போவதில் வரப்ரசாதி. கினைப்பு எங்கோ சகதிக்குள் புதைந்து கொண்டிருப்பதிலி ருந்து என்னை விடுவித்துக் கொள்ள முயன்றேன்.

“என்ன கருணாகரன் ஸார், நீங்கள் எழுதுவது எல்லாம் என்ன புது அலையா? பழைய அலையா? அலை களில் புதுசு, பழசு உண்டா'

“அலையாவது, கடலாவது, எல்லாம் சாக்கடையைத் திறந்து விட்டாச்சு. புண்ணிய தீர்த்தமாய், ஜனங்கள், மூக்கைப் பிடிச்சுண்டு முங்கி முங்கி எழறதுகள். பக்கத்தி லேயே கடல் பாய்ந்தால் என்ன, நதி ஓடினால் என்ன? நம்ம புத்தகங்கள் எங்கே கடையில் நகர்ரது? அப்புறம் என்ன? எழுதி என்ன பயன்? ஒரு சாகித்ய அகாடமி, ஒரு அறவாழிக் கட்டளை ஊஹாம்-ஒன்னு கிடைச்சால் கூட பிஸினெஸ்ஸில் போடலாம்-டே பையா' பையன் அப் போதுதான் வந்தான். சினிமா ஸ்டாருடன் அவள் வாங்கின பாத்திரங்களைச் சுமந்து கொண்டு போனவன். சாமிக்கும் எனக்கும் ரெண்டு கோப்பி வாங்கிவா போற வழியில் வீட்டுக்குப் போய் அம்மைகிட்ட பறை, சாமி மதியம் ஊனுக்கு என்னோடு வரதுன்னு வாழையிலை மறக்க வேண்டா.’’

இடையில் தூக்கிய தண்ணிக் குடத்தின் கிளுகிளுப்புப் போன்று கருணாகரன குரல். எக்காரணமாயும் அவர் குரல் தூக்கியோ முகம் சுணங்கியோ நான் கண்டதில்லை.

சரி...நிச்சயம் இன்று அவியலும், பப்படமும் எதிர் பார்க்கலாம். எனக்காகச் சக்கைப் பிரதமன் செய்தாலும் ஆச்சரியமில்லை. எனக்கு அனுபவம்தான். கருணாகரன்