பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7

ங்ேகள் ேேழி வாழ்க எனக்கு இப்பவே வயிற்றில் எலி பிராண்டுகிறது, எனக்கும் கினைப்பு இப்போத்தான் வரு கிறது. உர்ஸ் கொடுத்த சாயாத் தண்ணியோடு கிற்கிறேன். கருணாகரன் நீடுழி வாழி! உன் கைவாசம் எனக்குத் தெரியும், உனக்கு மனசும் மணம்தான்.

உர்ஸ், நீ நீடுழி வாழி! இன்று உன் சமையலிலிருந்து எனக்கு விடுதலை அல்லவா?

ஆகவே, எல்லாரும் இன்புற்றிருக்கவன்றி வேறேதும் அறியேன் பராபரமே.

கருணாகரன், ஆசைப்படுவதில் கூட பிசினாறித் தனமா? ஞான பீடம் மறந்து விட்டேளா?”

இப்படி இந்த நுனி காக்குச் சிலம்பத்திலேயே கொஞ்ச கேரம் ஓடும்.

'கருணாகரன் அப்போ எல்லாமே வியாபார நோக்குத் தானா?”

'ஸார் உங்களுக்குத் தெரியாது இல்லே. வியாபாரம்னு தனியா எதுவுமே கிடையாது. எல்லாம் பண்ட மாற்றல் தானே! கையால் தொடக்கூடிய பண்டங்கள் கண்ணால் பார்க்கக் கூடிய பண்டங்கள். ஸ்தாலப் பண்டங்கள். ஸ்து ல மற்ற பண்டங்கள். எல்லா உறவுகளும் அரிசி கொடுத்து அக்கா உறவுதான். நீ அவல் கொண்டுவா கான் உமி கொண்டு வருவேன் கலந்து ஊதி ஊதித் தின்கலாம்.

பொருளாதாரத்தின் தத்துவம், தத்துவத்தின் பொரு ளாதாரம், எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நீயே இருத் திக் கொள்ள முடியாது. ஒன்று வேனுமானால் ஒன்று. இழந்தாக வேண்டும். இயற்கை அள்ளி அள்ளித்தான்

கே, எ-3