பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கொடுக்கிறது. அதற்கு வேறு தெரியாது. ஆனால் ஆசை, இயற்கையின் உற்பத்தியையும் மீறியது. ஆகையால் இருப் பதுதான் பங்கு வளையம் வருகிறது. அப்படித்தான் வர. முடியும். ஒருவன் சரிந்துதான் மற்றவனின் ஏற்றம். தேய் பிறை, வளர்பிறை, விதி, யோகம், ராசி கம்பிக்கை, பேய், சாமி, பூதம், கடவுள். இந்தப் பங்கீடு கிலைமைக்கு என்ன பேர் வேனுமானாலும் வைத்துக் கொள். ஒரு பக்கம் செத்துக் கொண்டேயிருக்கிறோம். பக்கத்திலேயே பிறந்து கொண்டேயிருக்கிறோம். கிரவல், கிரவல்-காலம், பொழுது, ஏவல், இடம்-'

3

(அப்பா நீங்கள் பெரிய ஆளாயிருக்கலாம். ஆனால், உங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றாது!

இதுயார்? எங்கிருந்தோ சென்று போன வருடங்களின் இருளினின்று ஒரு குரல் பிரிந்து கேட்கிறது. கட்டைக் குரல்.)

தெருவில், பையன்கள் இருவர் பச்சை வாழை மரப் பட்டையால் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக் கொண்டு செல்கின்றனர். - ஒருவன் தலைகீழாக ஒருவாத்துக் கொத்தைப் பிடித்த வண்ணம் விலை கூவிக் கொண்டு போகிறான்.

கிமிடத்துக்கு கிமிடம் கூட்டம் நெரித்தது. புதுச் சரக்குகள்-காய்கறிக் கூடைகள், வாழைப் பழத்தார்கள், இலைக் கட்டுகள், கோணிகளில் தேங்காய், அரிசி, மாட்டுத் தீவனம், ஏதேதோ கைவண்டிகளில், லாரிகளில்