பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

இறங்கியவண்ணம் இருக்கின்றன, தெருவையடைத்துக் கொண்டு. அவைகளினிடையே, லாரிகள், பஸ்கள், போக்கு வரத்துக்கள். மனிதக் கால்நடை நெளிந்து நெளிந்து, வளைந்து வளைந்து, வைதுகொண்டு, திணறிக்கொண்டு, சிரித்துக்கொண்டு, தடுக்கி, இடறி, எப்படியோ தம்தம் வழியை வகுத்துக் கொண்டு...

இத்தனை சந்தடியில் ஒரு பிணக் கோலம், தாரை தப்பட்டையுடன்.

என்முறை எப்பவோ? சொல்லி விட்டுப் போகணும்.

"மிஸ்டர் ஜியார்ஜ், எனக்குச் சவப்பெட்டி அல்ல; எரு மூட்டை' என்று.

இது என்ன பேத்தல்? கானே போன பின் என் சடலத் தின் பட்டுவாடா பற்றி ஏன் இந்தக் கவலை? அப்படி ஏன் தோன்ற மாட்டேன் என்கிறது? சந்ததி சந்ததியாக ரத்தத் தில் ஊறிப்போன சடங்குகள், பழக்கங்களினின்று சட்டென மனது ஏன் விடுவித்துக் கொள்ள மறுக்கிறது? எதைப்பற்றியும் என்னால் இப்போ செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. மிஸ்டர் ஜியார்ஜ், செலவுக்கு அவரிடம் ஒப்படைத்த பணத்தை இடுப்பில் இடுக்கிக் கொண்டு அங்கேயே ஒரு பலா அடியில் மண்வெட்டியால் குழி தோண்டி அப்படியே சவத்தை உருட்டிவிடுகிறாரோ என்னவோ? அவரைப்பற்றி எதற்கும் கான் ஆச்சரியப்பட மாட்டேன்.

அம்மா சிரார்த்தத்தை உதறி விட்டதால் நான் மஹான் ஆகிவிடுவேனோ? கருணாகரன் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே!

"என் வயிற்றுப் பிழைப்பைக் கேரளத்தில் போட்டி ருக்கிறது. கான் பிரசுரமாக, தமிழ் நாட்டுக்கு என்