பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இறங்கிட்டே இருப்பதைப் பார்த்தால் எனக்குத் திணறுது :

என்னுடைய பிரமிப்புக்கு ஒரு கணம் தயங்கினார். ஒப்புக்குத் தலையை அசைத்தேன். பசி வயிற்றைக் குடை கிறது. மணியோ ஒடிக் கொண்டே யிருக்கிறது. இவர்களிட மெல்லாம் இது ஒரு பெரிய கோளாறு. அங்கே வர்ரும் பிள்ளாய்- என்று சபை கடத்துகிறார்கள். உன் சிண்டு என் கையில் என்று அப்பட்டமாயில்லாமல் அத்தனை விதமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாமும் தலையை இவர்களிடம் கொடுத்து விட்டு இவர்கள் வாயை எதிர் பார்த்துக் கொண்டுதானே கிற்கிறோம்! என்னதான் நம் ஒசத்தியை நம்மிடையே பீற்றிக் கொண்டாலும், கமக்கு குமாஸ்தா புத்திதானே! இவர்களைப்போல் துணிக் தடித்து ஒரு வியாபாரத்தில் இறங்குகிறோமா? அதற் கேற்ற நரம்பும் கமக்கு உண்டா?

'வெற்றிலை, ஸ்பெகுலேஷன் பிஸினெஸ், வாய்ச் சான் போச்சான்'-என்று முனகினேன். கருணாகரனுக் குக் கேட்டுவிட்டது!

"நாம் அப்படி சினைக்கிறோம். ஆனால் பாயி, தன் பதினோராவது வயதிலிருந்து இதிலேயே முங்கி முளச்சு, தாடியை உருவிக்கிட்டே ஆயுசு முழுவதையும் தாண்டி யாச்சு மூனுதாரம், இருவத்தி ஆறு சிசுக்கள்’’

கருணாகரனுக்குக் கலியாணமாகி பதினைஞ்சு வருடங் களுக்குப் பிறகு சீமந்தத்துக்கு அவர் அச்சடித்திருந்த அழைப்பிதழ் ஒண்னு மூணுபொறும். ஆன்ால் பாவம்! அந்த முயற்சி வீணாகிவிட்டது. இப்போ ஒரு பெண் ஏனையில் ஆடுகிறது-சோனி, என்னென்னவோ போஷாக்குப் பண்ணியாகிறது. இந்தக் கடவுள் இருக் தானே, அவன் விளையாட்டே வக்கிரம்,