பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

용

வீட்டுக்கு வீடு வாசற்படி.

'ஆனால் இப்போ வரவரக் கட்டி மேய்க்கறது கஷ்ட மாயிருக்கு துன்னு கேள்வி. வேளைக்கு நூறு இலை விளற வீடு குடும்பமா, காலனியா; ஆனால் இது கூடப் பராபரியா காதில் விழறதுதான். கிழவன் இருக்கிறவரை எவனும் ஒண்னும் ஆட்டிக்க முடியாது. ஆனால் கிழவன் இப்போ தைக்குத் தலையைப் போடறதா இல்லை. உடம்பை அவ்வளவு கண்டிஷன்லே வெச்சிருக்காரு. என்ன லேகியம் சாப்பிடறானோ தெரியல்லே, அதுக்கும் இந்த சீமையில் பஞ்சமில்லை.”

மறுபடியும் ஒரு தயக்கம்; வெடி குண்டுக்குத் திரி வைப்பதற்கு முன்னால்.

"ஆனால் அவர் ஒண்னும் கொடுங்கோலன் அல்ல. நியாயம் தெரிஞ்ச மனுசன். நியாயம் வளங்கற மனுசன். ஒரு விசயம் பாருங்களேன். ரொடேசனுக்கு ஒரு வாரம் பத்துநாளைக்கும் விரல் வாங்கறேனே ஐயா அதுக்குவட்டி வாங்கறதில்லே. இஸ்லாமில் வட்டி வாங்க அனுமதியில்லை எல்லோரும் சோதரர்கள். ஒருவருக்கொருவர் கடமைப் பட்டவர்கள்

எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. 'என்ன கருணாகரன், அவலை கினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறீர்கள்!'

'அதெல்லாம் ஒண்னுமில்லே, வியாபாரம் மக்தம், நீங்கதான் பார்க்கரீங்களே, மணி டைட்'

'கருணாகரன், இதென்ன தூண்டில் விளையாட்டு? இதற்கெல்லாம் நான் லாயக்கில்லை.”

“என்ன ஸார் உங்களுக்கு திடீர் மருட்சி? என்ன கடந்துட்டுது’’’