பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

إر

9

نملا

“உங்களை நம்பி என் முதல் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் வட்டியில்தான் ஏறவோ தாழவோ, நான் வயிறலம்பியாறது. வெற்றிலை சுல்தான் உங்களிடம் வட்டி வாங்காவிட்டால் நான் அவர் போல இருக்க முடியுமா? உங்களுக்குக் கஷ்டமானால் என் பணத்தைத் திருப்பிவிடுங்கள்.”

கருணாகரன் ஓரிரு கணம் திறுதிறுவென விழித்தார். என் பேச்சு அவர் மண்டையில் ஊறியதும் அவர் முகத்தில் மூட்டம் பளிச்சென்று விலகி கையைக் கொட்டி விழுந்து விழுந்து சிரித்தார். புரைக்கேறி திணறி . (இது ஒரு கடிப்பா? ராமா ஒண்னும் புரியல்லியே!) ஒரு வாறு சமாளித்து :

டே டே ரூட்டு அப்படி மாறிப்போச்சா? நான் ஏதோ வியாபார நிலவரத்தைப் பத்திப் பேசிக் கொண்டி ருந்தேன். அவ்வளவுதான். அதுக்குள் தாய், கன்னுக் குட்டியை உதைக்குதுன்னு அலண்டுட்டீங்களே! அட ராமா! இந்தப் பிராம்மணாள் இருக்காளே!...” மறுபடி சிரித்தார். அப்புறம் சொன்னார்...

“ஸார் ஒண்னு சொல்றேன் என்னுடைய இந்தப் புலம்பல், இன்று நேற்றையது அல்ல. இந்த பிஸினெஸ் பதினாலு வருடம் நடக்குது. இந்தப் புலம்பலும் கூடவே நடந்துட்டிருக்குது. அதனாலேயே அது புரட்டுன்னுtங்கள் கொள்ளக் கூடாது. அதுவும் உண்மைதான். அதுதான் பிஸினெஸ். தவிர, உங்கள் பணத்தைத் திடீர்னு கேட்டால் என்னைப்போல் சின்ன வியாபாரி எங்கே போவது: உங்கள் பணம் எங்கேயும் ஒடிப் போயிடல்லே, இங்கே தான் எப்படி யெப்படியோ-(கடைச் சரக்கின் மேல் கைiசிக் காட்டினார்)-எப்படியெப்படியோ முடங்கிக் கிடக்குது. நீங்கள் கேக்கறது எப்படியிருக்குன்னா உயிர்ப்