பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30



பிண்டம் பூமியில் விழுந்தப்புறம் இந்த உலகத்தைப் பார்த்து பயந்து, நான் திரும்பவும் கர்ப்பத்துக்கே திரும்பிட றேன்னா, அது நடக்கிற காரியமா? நியாயமா?"

'கருணாகரன், உங்கள் பேச்சு தைரியம் தருவதா யில்லே. குரங்கு நியாயம் பேசறீங்க, பணியாரம்என்கையில் வந்தாச்சு, நான் பிடிக்கிற தராசுதான் உனக்கு உண்டு. இனி பணியாரத்தைப் பணியாரமா நீ பார்க்க முடியாது என்கறீங்க, அதானே?’’

"செச்சே கனாவில்கூட அப்பிடி நான் நினைக்கல்லே. ஸத்யமா, யாரை ஏமாத்தினாலும் உங்களை ஏமாத்தமாட் டேன். பிராம்மண சாபம் பொல்லாது ஸார்-பூண்டோடு அறுத்துடும். அவள் நாலு மாதமா குளிக்கல்லே. உங்கள் ஆசியில், பிள்ளையாப் பிறக்கணும்.'

அப்படியே நெடுஞ்சாங்கடையா காலில் விழுந்து விட்டான். நான் எதிர் பார்க்கவில்லை. அதனால் தடுக்க முடிய வில்லை. .

கருணாகரன், எழுந்திரும்! எழுந்திரும்! இப்போ என்ன நடந்து விட்டது?' எனக்கு என்னவோ போலாகி விட்டது. இப்போ நான் அவரை மன்னிப்புக் கேட்கிறேன்.

அவர் எழுந்ததும் முகம் சிவந்திருந்தது. கண் துளும் பிற்று.

“ஸாருக்கு என் மேல் என்ன கடுப்போ தெரிய வில்லை. மூக்கை உறிஞ்சினார்.

கருணாகரன் எனக்குப் பசி என்று கினைக்கிறேன்.”

பதறிப் போனார். அடடா! காலையில் ஆகாரம் பண்ணேளோ இல்லையோ, எழுந்திருங்க. கடையை அடைச்சுட்டு வீட்டுக்கே போகலாம்.'