பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டு மணி பஸ் தவறி விட்டது.

அடுத்தது இரண்டு மணிக்கு காத்திருக்கும் சித்ர வதைக்கு ஏதேனும் ஒரு வண்டி, எதிர்த்திக்காயிருந்தாலும் சரி-எங்கானும் போய்க் கொண்டிருந்தால் சரி. பைத்தியம் பிடித்து, உண்மையாகவே அந்தப் பைத்தியக்காரத்தனத் தைச் செயல்படுத்துவதற்கு முன்னால், நல்ல வேளை, இரண்டுமணி வண்டி மூணு மணிக்கு மாப்பிள்ளை மாதிரி மிடுக்காக வந்து திடீர் ப்ரேக் போட்டு கின்றது.

உள் இருந்தவர்கள் வெளியேற, வெளிக் கூட்டம் உட்புக, கேர்ந்த மத்துக்கடையலில்-ஒரு கையில் வாழைப் பழச்சீப்பு-அப்பா கருணாகரா, போதுமடா நீ படுத்தற பாடு; தலையிலடித்துக் கொள்ள மறுகை இல்லே. வேட்டி அவிழ்ந்து போச்சுடா-விற்க இடம் கிடைத்ததே அனந்த பத்மநாபன் அருள்.

இது சாக்கில் ஒரு எண்ணம், தோன்றியது தோன்றியபடி. ஒண்னும் வேண்டாம், வெறுமென உயிரு டன்- அல்ல, உயிராக இருப்பதே. இருப்பதிலேயே, அந்த ப்ரக்ஞையிலேயே ஒரு தூய சந்தோஷமுமில்லை? உபநிஷத் கதை-பாழுங் கிணற்றில் விழுக்து விட்ட ஆள்-தண்ணி ரில் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் முதலைமேல துரத்தி வந்தபுலி-உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு-ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம் புத் தேனுக்கு காக்கை நீட்டிக் கொண்டு, காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்த வரை-இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலைப் படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைத் தான் பார்க்கனுமா?