பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

தொடுத்து வரும் மந்தரத்தில் ஸிம்ஹகாதம், அதிபஞ்சமத் தில் வானம்பாடி உச்சஸ்தாயிலிருந்து அப்படியே சுருண்ட அடித்துக் கொண்டு கீழிறங்கும் பிர்க்காவில், ஜாதிப்பறவை யின் குறி பிசகா பாய்ச்சலின் வீச்சு. அந்த த்ரில்லை' நினைத்தால் உடல் குலுங்குகிறது.

அடுத்தாற் போலேயே எதிர்மாறான ஒப்புவமையில் மதுரை சோமு. ஸ்ருதி சுத்தமான காதவெள்ளத்தின் காட்டாறு. குரு காதா! அன்றொரு நாள் இதே திருவை யாறு உற்சவத்தில், தன் குருநாதர் பாட, அவருக்குத் திண்டு மாலை சார்த்தினாற் போல, பின்னணியில் சோமு குரல் குருநாதரின் குரலை அன்புடன், பணிவுடன், திடமாக அணைத்துக் கொண்டு மரியாத காதய்யா!' அப்பா இப்பவும் மயிர் கூச்செறிகிறது. அதுபோல் இன்னும் கேட்கப் போகிறேன். எனக்குத் தெரியும். கேட்கப் போவதில்லை.

அதெல்லாம் முகூர்த்தவேளை. விதி பாக்கியம் அப்போ அமைந்ததோடு சரி. திரும்பாது,

அறை விளக்கை அனைத்து விட்டு ரேடியோ பல்பே இருளின் நெற்றிக்கண். ரேடியோ எதிரே, பிரம்பு சாய்வு நாற்காலியில் அம்மா சாய்ந்து கொணடிருக்கிறாள். அவள் காலடியில் நான், தரையில்.

அம்மாவின் பார்வையின் மெத்'தை உணர்கிறேன். இசை பின்னும் கோலத்தில் நாங்களும் இரு கட்டான்கள்.

'குருகாதா!'

அம்மா! நீயேதான் என் குருவும் கூட. என்னை ஆளாக்கினவளே தோன். இந்த சமயம், உன் காலடியில், கான் இப்படி உட்கார்ந்திருப்பது-அம்மா எனக்குச் சொல்லத் தெரியல்லே-நான் காயாக மாறி விடமாட்