பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

டேனா என்று ஆசையாக இருக்கிறது. அம்மா எனக்கு சொல்லத் தெரியல்லே

அதெல்லாம், முகூர்த்தவேளை திரும்பாது.

அம்மா, என் இதயத்தில் அப்படிக் கிளர்ந்தது பக்தியா பாசமா, விசுவாசமா?

உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. உன் மோனச் சிரிப்பைச் சிரித்துக் கொண்டு சும்மாயிருந்து விடுவாய் மூலவர் போல. -

'அடபோடா அசடே' என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.

'உனக்கு எப்படித் தோண்றதோ அது' என்றும் கொள்ளலாம்.

என் அசட்டுக் கேள்விக்கு வாய் திறந்து பதில், அதை விட அசட்டுத்தனமாயிருந்திருக்கும்.

அது எனக்கு இப்போ புரிகிறது. ஆனால் அது உனக்கு அப்பவே தெரியும்.

கேள்வியோ, பதிலோ வெளிப்பட்டிருந்தால்; அந்த சொல்லிலேயே சிதைத்து விடும் நேர்த்தியான தருணம் அது. அந்த வேளையின் துல்லியத்தில் இங்கே ஏதோ ஒரு உண்மை மலர்ந்திருக்கிறது. அதன் இதழ்களின் நடுவி லிருந்து மோனாதேவி எழுகிறாள். அவள் அரிதானவள். கேள்வியென்றும், பதிலென்றும், விசாரணையென்றும், 5ம் வறட்டுச் சாதுர்யங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வார்த்தைகளின் கிசுகிசுப்பு கூட அவளுக்கு ஆகாது. நலுங்கிப்போவாள். அவ்வளவுகளினமானவள் நளினகாந்தி.

'மன வியால கிஞ்சரா தடே மர்மமெல்லதில்-'