பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

போட்டுக் கொண்டேன், அம்மாடி! தொண்டைக் குழாய் வழி சில்லென்று உள்ளே இறங்குகையில் என்ன சுகம்! என்ன சுகம்? மேலும் நாலைந்து உரித்து ரயில் வண்டித் தொடர்போல் ஒன்றையொன்று ஒட்டினாற் போல் வைத்தேன்.

இதென்ன உறவு? ஐந்து வருடங்களாக விட்டுப்போன அம்மா சிராத்தம் இன்று ஸர்வ ப்ராயசித்தத்துடன் கிறை வேற்றிக் கொள்கிறதா? தன் ஹவிர்ப் பாகத்தை அம்மாவே கேரில் வந்து வாங்கிக் கொள்கிறாளா? என் சக்தி அவள் பசி-எங்கள் அந்தரங்கம் காங்கள் யாருக்குச் சமாதானம் சொல்லியாகனும்:

ககர்ந்து நகர்ந்து பத்தடி-அது என்னைத் துரத்த வில்லை, இன்று காலை உர்ஸ் என்னை முன் கூட்டி எச்சரித்த இடம் இதுதான் என்று ஞாபகம் வந்ததும்-என் கடை வேகம் அதிகரித்தது. ஒன்றும் நேரவில்லை. திகில்ஒடினேன். குடிசை, குடிசைச் சாவியைக் கண்டு பிடித்து எடுத்து, கதவைத் திறந்து, உள்ளே புகுந்து கதவை மூடித் தாளிட்டு-அதற்குமேல் தாளவில்லை. தடம் திரும்பி விட்டது. குப்பென்று வேர்த்துக் கொட்டிற்று. முடிய வில்லை. இடுப்பு தள்ளாட்டம் கண்டு விட்டது. கின்ற விடத்திலேயே தடாலென்று விழுந்ததுதான் தெரியும்.

6

கதவைத்தட்டும் சத்தம்.

விழித்துக் கொள்கிறேன்.

சுவரில் பொற்கதிர்கள் விளையாடிக் கொண்டிருக் கின்றன.