பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீழ்

முக்கி முனகி எழுந்து கதவைத் திறக்கிறேன்.

வாசற்படியில் உர்ஸ் கிற்கிறாள். ரவிக்கை. பாவாடை. இடையில் குடம். மறுகையில் என் வாழைப் பழச் சிப்பு போனது போக.

அவள் கண்களில் வியப்பு. வாதாங்கொட்டை மேட்டு விழிகள். கீழுதடின்மேல் உறங்கும் மேல் உதடு, அசப்பில், சில ஒரைகளில் சில சாயல்களில் அந்த முகம் சிற்பியின் கனவாயிருக்கக்கூடும்.

மறுபடியும் எனக்கு உடலில் வெலவெலப்பு. தள்ளாடி கடந்து, சற்று எட்டப்போய் உட்காருகிறேன்.

என்மேல் நாட்டம் மாறாமலே குடத்தை இறக்கி விட்டு என்னிடம் வந்து அருகே அமர்கிறாள். மழையோ, வெய்யிலோ, கொட்டுகிற பணியோ, இந்த மலையாளிகள் எப்படி இவ்வளவு தண்ணிப்பு வெள்ளத்தில் நாள் தவறாது தலைக்கும் ஸ்னானம் பண்ணுகிறார்கள்: ஜலத்தில் விரலை வைக்கவே கமக்குப் பயமாயிருக்கிறது.

அவள் விழிகளில் வினா முற்றியது. சட்டென அவள் மூக்கு நுனி சுருங்கிற்று. என்னை, என் முகத்தை, என் மார்க்களத்தை, மூக்கு துனியாலேயே உழுவதுபோல, மேலேபடாமல், பரவலாக முகர்ந்தாள்.

"என்ன ஸாமி, நேற்று பெரியகளியோ?” பாதி நையாண்டி, பாதி வினை.

ஆம், எனக்கும் தெரிகிறது, என்மேல் தாழம்பூ கமாளிக்கிறது.

--செளக்யமாயிருக்கேளா நீங்கள் எங்கேயோ அங்கே நீங்கள் நான் இங்கே இருவருக்கும் வீண் வீறாப்பில் விரலி டுக்கில் வழிஞ்சுபோன நாட்களை நான் எண்ணி வெச்சு