பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玺

கல்லே, உங்கள் மாதிரி. ஆனால் உள்ளே உளுத்துப் போச்சு. ஒரு வருஷமா உடம்பு சரியில்லே. சோர்ந்து சோர்ந்துவரது. ஆகாரம் தங்கல்லே. வெளி நோக்கிடறது. எக்ஸ்ரே எடுத்தது. எல்லாம் சரியாய்ப்போயிடும்னு எல்லா ரும் சேர்ந்து அடிச்சு சொல்றா. அதாலேயே முழுப் பூசனிக் காயை மறைக்கறா. மனசை சரியா வெச்சுக்கணுமாம் எப்படி வெச்சுக்கறது? நீங்களே சொல்லுங்கோ...என்னை வந்து பாருங்கோ, கமஸ்காரம். கேக்குப் பயமாயிருக்கு."

கேக்குப் பயமாயிருக்கு."

ஆம், எனக்கும்தான் பயமாயிருக்கு. பயம் ஒட்டுவா ரொட்டி, காய் பாய்கிற மாதிரி ப்யத்தை இன்னொருவர் மேல் அவிழ்த்து விடலாம். என் கைகளில் உதறலினின்று ஒளிந்து கொள்வதற்காக இருகைகளாலும் என்னை அழுந்தத் தழுவிக் கொள்கிறேன். வெய்யில் திடீரென மஞ்சள் மங்கிற்று.

உர்ஸ் குந்திட்டு உட்கார்ந்து கொண்டு தோசை வார்த்துக் கொண்டிருக்கிறாள். மாவுக் கொட்டாங்கச்சி யினாலேயே, தகரத்தில் ஊற்றிய மாவை மெல்லியதாக வட்டம் எழுதுகிறாள். கொடியடுப்பில் குழம்பு காய்கிறது, தோசையில் புள்ளிகள் தோன்றுகின்றன. மணம் வயிற்றைக் குடைகிறது. நேற்று பட்டினி என்பதால் மட்டு மல்ல. வயிற்றில் மண் எடுத்துவிட்ட மாதிரி, ஏதோ பள்ளம் விழுந்து விட்டது. கெட்ட சேதிக்கு ஒண்னும் வேண்டிருக்காது என்பார்கள். ஆனால் எனக்குப் பயங்கர மாப் பசிக்கிறதே!

பாம்பு கழுத்தில் விழுந்தது ஆகாதென்பார்கள். “கழுத்தில் விழுந்த மாலை கழட்ட முடியவில்லை.

கற்காரிகையே வகையறியேனே.”