பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அந்த நாள் நாகசாமி பாகவதர் ப்ளேட், மூக்குக் கொஞ்சம் கொண கொண ஆனால் நல்ல குரல்.

விட்டுத் தொலைத்து விட்டேன். சென்று போன என் வாழ்க்கைக்கு ஸ்னானம் பண்ணி விட்டேன் என்று கினைச்சதெல்லாம் தப்புக் கணக்கு அஞ்சு வருடங்களாகி யும், இவ்வளவு தூரத்திலும் மதுரத்தின் கை இவ்வளவு நீளமா? கடலா முத்தில் நங்கூரம் புதைவது போல.

இப்போ கூட என்னைக் கட்டியிழுத்துச் செல்ல யார் இங்கே? முகம் பாராமல், முதுகைத் திருப்பிக் கொள்ள எத்தனை நகழி?

எண்ணினால் வந்த கடிதம் எட்டு சுக்கல். மதுரநாயகி அம்மாள், உங்கள் கடிதம் கண்டு உங்களை நான் மறந்தா லும் என் மனச்சாட்சி தெளிவுதான். நீ அன்று சவால் விட்ட மாதிரி உன் பிள்ளைகள் முன்னுக்கு வந்திருப்பார்கள். உன்னை ஜாம் ஜாம் என்று தாங்குகிறார்கள். ஏழை கான் அங்கு வந்து உனக்கு என்ன செய்யப் போகிறேன்? இறந்த காலத்துள் என் என்னைத் திரும்ப இழுக்கப் பார்க்கிறாய்? உன்கோபுரத்துக்கு அழகாகக் குரங்கு வேண்டியிருக்கிறதாக் கும்! இப்பவே நீ பொய் சொல்லவில்லை என்று என்ன கிச்சயம்? உன் தாய் வழிப்படி உனக்கு ஆயுசு கெட்டியாகத் தானிருக்கும். இதெல்லாம் சந்ததி பேசும்

அரவம் கேட்டு கிமிர்கிறேன். உர்ஸ் இரண்டு கைகளி லும் ஏனங்களைத் தாங்கிக் கொண்டு எதிரே கிற்கிறாள். என் மடியில் தோசையைத் தட்டோடு வைக்கிறாள். பற்றா பசையா? மதுரம் கத்துவாள். இப்பலே ஆரம்பித்து விட்டாளே குடி தண்ணிரைத் தரையில் வைத்து விட்டு என் காலடியில் உட்கார்ந்து கொள்கிறாள்.

‘சாமிக்கு உடம்பு சுகமில்லையோ?”