பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமுறை இடைவெளி

மகனே,

இந்த வயதில் எல்லோரும் எனக்கு மகன்களே...

மகனே அன்பு, பாசம், மரியாதை-நீயாகவே கொடுத் தால்தான் வாங்கிக் கொள்ள முடியும்.

என் குறைகளுடன் என்னை நீ புரிந்து கொண்ட பின் னரும் என்மேல் நீ உணரும் பிரியத்தின் மறுபெயர் மரி யாதை. பிரியத்தின் உச்ச நிலையின் எடைதான் மரி யாதை,

அன்பு, பாசம், பிரியம், மதிப்பு, மரியாதை-யாவும் பரஸ்பரம். கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத் தினால் அவை அவை அல்ல.

மகனே, இன்று உனக்கு நான் வேர். நாளை, நீ என்னைத் தாங்கும் விழுது.

நானும் நீயுமாய், வேரும் விழுதுமாய் மாறி மாறிக் காத்த மரம்தான் இந்த மனிதப் பரம்பரை. ஆகவே நம் முள், தலைமுறை இடைவெளி என்று தனியாக ஏது?

நீங்கள் பெரியவர்கள் என்று பூச்சில், புத்திமதியென் றும், எச்சரிக்கையென்றும்,-ஆனால் உண்மையில் எங்கள் மேல் செலுத்தும் உங்கள் அதிகாரத்துக்கு இனிப் பணிய மாட்டோம். எங்களை நாங்கள் இனம் கண்டு கொண்டு விட்டோம். எங்கள் விதி, எங்கள் வாழ்க்கை எங்களுடை யது' என்று, தறிதெறித்த தன்னிச்சைக்கு அறைகூவல் தானே நீங்கள் கொண்டாடும் தலைமுறை இடைவெளி:

தலைமுறை இடைவெளி என்று இன்று பெயர் வைத்த தனால்தான் தலைமுறை இடைவெளி(?) என்று. அது இல்லை? இதிகாச காலத்திலிருந்தே - நாளைத் தெரியு மடா மாலியவான் பேச்சு’’ என அன்றே அடையாளம் கண்டு கொண்டாயிற்றே? பீஷ்மன் பேச்சை யார் கேட்டார் தள்?